31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Ekambaram Shanmugalingam
Age 59October 4, 1956 – August 25, 2016
- Born in
- Analaitivu
- Lived in
- Brampton
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஏகாம்பரம் சண்முகலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
சிலைபோற்கண் மூடிக் கொண்டாய்
விண்ணின்று மழைபொழியும் அந்தக் காலம்
வித்தகநீ ஏர்பிடித்த இளமைக் காலம்
கண்ணள்ளும் அழகோடு களிறு மீது
காரியென்னும் ஐயனார் உலாப்போம் காலம்
திண்மையோடு தோள்மீது கொம்பு தாங்கித்
திருவீதி தோறும் நீ சுமந்த காலம்
எண்ணுங்கால் இனிக்கிறது எங்கள் ஐய
எழுந்தோடி வந்துநின் கோலம் காட்டு!
பேரால மரக்கிளை கூடு கட்டிப்
பெருமையுற வாழும் புட்குலங்கள் போலச்
சீராள நின்னிழலில் நாமெல்லோரும்
செம்மைநலம் சிறந்திருக்கச் சிரித்து வாழ்ந்தோம்
நீராடும் நதிபோல அமைந்த வாழ்வில்
நிலைமாறித் தரைவீழ்ந்த மீன்போ லாக்கிக்
காரோடும் வானத்திற் கதிராய் நின்ற
கண்மணியே எமை விட்டு யாங்குற் றாயோ?
கூறாது குறியாது சென்றாய் அங்கே
கூடிவரும் முடிவெல்லாம் அவனே கண்டாய்
மாறாத நினைவெல்லாம் இங்கே விட்டு
மன்னவனே சிலைபோற்கண் மூடிக்கொண்டாய்
ஆறாத மனத்துயரைச் சேர்ந்தோர்க் காக்கி
ஐயனது திருவடிக்கீழ் என்றும் வாழும்
போறாநீ நாடிவிட்டாய்? பெம்மான் நிழற்
சுகம்கண்டு இனிதே வாழி!
அன்னாரின் மறைவு குறித்து பல வழிகளில் அனுதாபச் செய்திகளை உலகமெங்கும் இருந்து அனுப்பிய, தெரிவித்த உறவினர்கள் நண்பர்கள் நேரடி ஒளிபரப்புச் செய்த அனலை எக்ஸ்பிறஸ் நிறுவனத்திற்கும், அனைவருக்கும் கனத்த நெஞ்சோடு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 19-09-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் யாழ். அனலைதீவு வடலூர் இராஜராசேஸ்வரி அம்மன் கோவில் தீர்த்தக்கரையில் நடைபெற்று பின்னர் 23-09-2016 வெள்ளிக்கிழமை அன்று அவரது Brampton இல்லத்தில் சமயக்கிரியைகள் நடைபெறும், 24-09-2016 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் Grand Taj Banquet, 6915 Dixie Rd, Mississauga, ON L5P 1B2, Canada என்னும் முகவரியில் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நடைபெறும், இந் நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

