மரண அறிவித்தல்

In loving memory of
Erampamoorthi Navaneetham
Age 72May 9, 1946 – October 1, 2018
- Born in
- Pungudutivu 2nd Ward
- Lived in
- Colombo Wellawatta
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பாங்சால் வீதி, வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஏரம்பமூர்த்தி நவநீதம் அவர்கள் 01-10-2018 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஏரம்பமூர்த்தி(மகாலிங்கம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து தெய்வானப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகநாதி நாகம்மா தம்பதிகளின் பாசமிகு பெறாமகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா ராசம்மா மற்றும் நாகமுத்து(இரத்தினம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுதர்ஜினி(லண்டன்), சிவதர்ஜினி(கொழும்பு), அருட்செல்வி(லண்டன்), அருட்செல்வன்(கனடா), அருட்பிரசன்னா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சரஸ்வதி, மனோகரன், மனோன்மணி, சண்முகலிங்கம், திலகவதி, சரோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அரவிந்தன்(லண்டன்- தமிழர் விடுதலை கூட்டணி), சுகந்தன்(கொழும்பு), யோகச்சந்திரன்(லண்டன்), சசிரேகா, லக்ஷிகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பராசக்தி, காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், சிவானந்தன் மற்றும் திருநாவுக்கரசு, கமலாதேவி, பரமானந்தன், அருளானந்தன், நித்தியானந்தன், உமாதேவி, சதானந்தன், திருச்செல்வம், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், திருநாவுக்கரசு மற்றும் உமையாம்பிகை, சுந்தரலிங்கம், சண்முகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஹரிசன், சயனிதா, பிரகவி, சருணியா, நர்மிகா, சுபிதன், நிகர்ஷிதா, அக்கீஸ், சஸ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 04-10-2018 வியாழக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் மு.ப 09:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 05-10-2018 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல - 05, 2/2,
ருத்ரா மாவத்தை,
கொழும்பு - 06
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

