மரண அறிவித்தல்

In loving memory of
Fernando Philippu
Age 78March 30, 1938 – May 23, 2016
- Born in
- Mannar Manthai
- Lived in
- Mannar
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமன்னார் மாந்தையைப் பிறப்பிடமாகவும், குழந்தை யேசுபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பறுனாந்து பிலிப்பு அவர்கள் 23-05-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பறுனாந்து(ஆசை- ஆசிரியர்) மேரி ராசமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செபமாலைமுத்து அந்தோனியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சின்னமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கீர்த்திராஜ், திருமகள்(கச்சேரி, மன்னார்), ஜோண்சன்(லண்டன்), செல்வமகள்(லண்டன்), மதிவண்ணன்(லண்டன்), ஹோமர்(முகாமையாளர்- HNB Grameen), ஞானப்பிரகாஷ்(தாதியர் கல்லூரி- யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஞானம்மா, காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம்(அதிபர்), சேவியர் சிறில்(கிராம அலுவலர்), யோகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிறேசியஸ்(சேகரன்), தவமலர்(லண்டன்), ஜெயசீலன்(ஜெசி- லண்டன்), டிசாந்தி(லண்டன்), டிலக்ஷா(சமுர்த்தி- மன்னார்), டனோஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
புனிதசீலி, அன்னமலர், நேசன், அஞ்சலா(ஆசிரியர்), பிரான்சிஸ் சேவியர்(பரஞ்சோதி, அதிபர்- அடம்பன்) காலஞ்சென்றவர்களான ஞானப்பு, லோறன்ஸ், இராசசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மதுராந்தகன், மதுராந்தகனி, கஜன், கீதன், கீர்த்தகி, ஜெக்ஷன், ஜெவிஷன், ஜெஸ்மி, ரக்ஷிதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 24-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு பி.ப 03:00 மணியளவில் குழந்தை யேசுபுரம் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மன்னார் பொது சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

