1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Jegatheeswari Somasundaram
Age 59March 26, 1950 – December 28, 2009
- Born in
- Urumpiray
- Lived in
- Urumpiray
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஉரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஜெகதீஸ்வரி சோமசுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
மெழுகுவர்த்திபோல் உம்மை உருக்கி!
எம்மைப் பேணி பாதுகாத்த அன்னையே,
சகோதரியே, சிற்றன்னையே, மருமகளே,
மைத்துனியே, மாமியே, பேத்தியே,
பாசத்துடன் பழகிய உங்களை,
உங்கள் குரலை காணாது, கேட்காது,
ஏங்குகிறோம் இவ் அவனியில்,
நாட்கள் ஓராண்டு என்ன!
பல ஆண்டுகள் ஆனாலும் உங்கள்,
நினைவலைகள் எம்மைவிட்டு அகலாமல்
ஆளாத்துயரில் ஆழ்த்திவிட்டீர்களே!
கேட்போம் உங்கள் குரலை
பார்ப்போம் உங்கள் வதனத்தை
என்று ஏங்கித் தவித்தோம் பல நாட்கள்!
நாட்கள் ஓடி மறைந்தாலும் உங்கள்
நினைவுகள் எங்களைவிட்டு அகலுமா?
எதற்காக இறைவன் சீக்கிரம் உங்களை,
அழைத்தான் என்று புரியாமல் இன்றும்,
விக்கித்து வேதனையில் வாடுகிறோம் நாம்!
ஓராண்டு கழிந்தாலும் எங்கள் விழிகளின்
ஓரம் நீர் வற்றாது துயருகிறோம்,
உங்கள் நினைவால்!
அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை 18.12.2010 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும் என்பதனை பிரிவுத்துயருடன் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் தெரிவிக்கின்றோம்.
— மகன், சகோதரிகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

