ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஜெகதீஸ்வரி சோமசுந்தரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஜெகதீஸ்வரி சோமசுந்தரம்

வயது 5926 மார்ச், 1950 – 28 டிசம்பர், 2009

பிறந்த இடம்
உரும்பிராய்
வாழ்ந்த இடம்
உரும்பிராய்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஜெகதீஸ்வரி சோமசுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

மெழுகுவர்த்திபோல் உம்மை உருக்கி!
எம்மைப் பேணி பாதுகாத்த அன்னையே,
சகோதரியே, சிற்றன்னையே, மருமகளே,
மைத்துனியே, மாமியே, பேத்தியே,
பாசத்துடன் பழகிய உங்களை,
உங்கள் குரலை காணாது, கேட்காது,
ஏங்குகிறோம் இவ் அவனியில்,
நாட்கள் ஓராண்டு என்ன!
பல ஆண்டுகள் ஆனாலும் உங்கள்,
நினைவலைகள் எம்மைவிட்டு அகலாமல்
ஆளாத்துயரில் ஆழ்த்திவிட்டீர்களே!
கேட்போம் உங்கள் குரலை
பார்ப்போம் உங்கள் வதனத்தை
என்று ஏங்கித் தவித்தோம் பல நாட்கள்!

நாட்கள் ஓடி மறைந்தாலும் உங்கள்
நினைவுகள் எங்களைவிட்டு அகலுமா?
எதற்காக இறைவன் சீக்கிரம் உங்களை,
அழைத்தான் என்று புரியாமல் இன்றும்,
விக்கித்து வேதனையில் வாடுகிறோம் நாம்!
ஓராண்டு கழிந்தாலும் எங்கள் விழிகளின்
ஓரம் நீர் வற்றாது துயருகிறோம்,
உங்கள் நினைவால்!

அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை 18.12.2010 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும் என்பதனை பிரிவுத்துயருடன் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் தெரிவிக்கின்றோம்.

— மகன், சகோதரிகள்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.