10ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kadarpuli Major Inbanila
Age 25July 17, 1974 – January 11, 2000
- Born in
- Maruthangkeni
- Lived in
- Maruthangkeni
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதமிழீழம் மருதங்கேணி தெற்கைச் சேர்ந்த கடற்புலி மேஜர் இன்பநிலா (மயில்வாகனம் கன்னிகாராணி) அவர்களின் 10ம் ஆண்டு வீரவணக்கம்.
முத்தாக அரும்பிய சின்ன மொட்டு நீ
தத்தை மொழியால் எம்மை சிரிக்க வைத்து
சித்தம் குளிர வைத்தாய் நீ
பத்து வயதிலே படிப்பிலும் படுசுட்டி நீ
புத்தனின் அடியொற்றிகளால் எமதினம்
கொத்திக் குதறப்படுவது கண்டு மனம் துடித்து
காத்திருந்து கரிகாலன் படை சேர்நதாய் நீ
நித்தமும் போராடினாய் நீ ஈழமண்ணை
கொத்தாக அழிக்கவந்த குண்டதனை
பத்திரமாக நெற்றியிலே தாங்கினாய் நீ
சத்தம் சலனமின்றி மெளனமாகி
வித்தாகிப் போனாய் நீ - தமிழீழத்தின்
சொத்தாக ஆனாய் நீ -ஆண்டுகள்
பத்தாகியும் நிற்கவில்லை எம் விம்மில்
செத்துவிடவில்லை நீ ஈழத்தில் புதிதாய்
பூத்துவருவாய் நீ என்று காத்திருக்கின்றோம்
பெத்த தாயும் உடன்பிறப்புக்களும்
— என்றும் உன் நினைவுகளுடன் அம்மா, சகஉதிரங்கள், உறவுகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

