10ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கடற்புலி மேஜர் இன்பநிலா
மயில்வாகனம் கன்னிகாராணி
வயது 2517 ஜூலை, 1974 – 11 ஜனவரி, 2000
- பிறந்த இடம்
- மருதங்கேணி
- வாழ்ந்த இடம்
- மருதங்கேணி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதமிழீழம் மருதங்கேணி தெற்கைச் சேர்ந்த கடற்புலி மேஜர் இன்பநிலா (மயில்வாகனம் கன்னிகாராணி) அவர்களின் 10ம் ஆண்டு வீரவணக்கம்.
முத்தாக அரும்பிய சின்ன மொட்டு நீ
தத்தை மொழியால் எம்மை சிரிக்க வைத்து
சித்தம் குளிர வைத்தாய் நீ
பத்து வயதிலே படிப்பிலும் படுசுட்டி நீ
புத்தனின் அடியொற்றிகளால் எமதினம்
கொத்திக் குதறப்படுவது கண்டு மனம் துடித்து
காத்திருந்து கரிகாலன் படை சேர்நதாய் நீ
நித்தமும் போராடினாய் நீ ஈழமண்ணை
கொத்தாக அழிக்கவந்த குண்டதனை
பத்திரமாக நெற்றியிலே தாங்கினாய் நீ
சத்தம் சலனமின்றி மெளனமாகி
வித்தாகிப் போனாய் நீ - தமிழீழத்தின்
சொத்தாக ஆனாய் நீ -ஆண்டுகள்
பத்தாகியும் நிற்கவில்லை எம் விம்மில்
செத்துவிடவில்லை நீ ஈழத்தில் புதிதாய்
பூத்துவருவாய் நீ என்று காத்திருக்கின்றோம்
பெத்த தாயும் உடன்பிறப்புக்களும்
— என்றும் உன் நினைவுகளுடன் அம்மா, சகஉதிரங்கள், உறவுகள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

