2ம் ஆண்டு நினைவஞ்சலி

Kanagambikai Shanmugarajah-
Age 91
- Born in
- Anaipanthy
- Lived in
- Jaffna, London, Chundukuli, Berlin
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், சுண்டிக்குளி யாழ்ப்பாணம், ஜேர்மனி பேர்லின், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகாம்பிகை சண்முகராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
என்ன குறை நீர் வைத்தீர் எமக்கிந்த வாழ்வினிலே
இந்த குறை நீரில்லை இனியெம் வாழ்விலென்று
சொல்லி அறையுது சோகம் ஒவ்வொரு கணப் பொழுதும்,
விம்முகின்ற எம் துயர் விளம்ப
ஒரு வகையின்றி செய்துஇரண்டாண்டு பறந்தது!
நீர் இல்லாத குறை எமை எப்பொழுதும் எரித்திடவிழிநீர் வற்றா,
உம் நினைவும் வற்றா !புது செடிகளும் கொடிகளும் மலர்களும்
இக்குடும்ப வனத்தில் தளிர்க்கின்றன,அடி வேரான
உம் நினைவுகளும் வழிகாட்டலும்
அடியொற்றி வரும் எம்முடனே!!
அம்மாவுக்கு அம்மாவாய் அப்பாவுக்கு அப்பாவாய்
ஆசானுக்கு ஆசானாய் அரவணைத்த அம்மாவாய்
பேறு பெற்ற எம் மகிழ்வில்
பேயின் கண்கள் பட்டதுகூறு போட்டு போனான் காலன்
கொடுந்துயர் தந்து ஆண்டு இரண்டானது
வீடு பெற்று போனீர் விடை பெற்று
விண்ணேகி கூடியங்கு கொண்டாட
கொண்டவனும் பெற்றவனும்
வாரியெடுத்தும்மை வடிவாக இருத்தி வைப்பர்
அவர் தேடிப் பார்த்திருக்கிறோம்
மீண்டும் உமைசந்திக்க மிகு காலமாகாது காண் !
வருந்தியழைத்தாலும் திரும்பி வரவியலா
தொலைவுபொருந்தி போனீர்
மனமுற்று எம் உறவேஇருந்து
எம் சீர் பார்த்தது போதுமென்று நினைந்து கருதி
வெளியேறினீரோ கனவாழ்வு போதுமென்று?
இருப்பதும் இறப்பதும் இறை தந்த விதியென்று
மனம் பொறுத்து காத்திருக்கிறோம்
கண்ணீர் அஞ்சலிகளூடே,அம்மா!!!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

