ஆறுதல்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு15 ஆகஸ்ட், 1928
இறப்பு26 ஏப்ரல், 2020
கனகாம்பிகை சண்முகராஜா அவர்களின் படம்

கனகாம்பிகை சண்முகராஜா

வயது 91

பிறந்த இடம்
Anaipanthy
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம், London, சுண்டுக்குழி, பேர்லின்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், சுண்டிக்குளி யாழ்ப்பாணம், ஜேர்மனி பேர்லின், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகாம்பிகை சண்முகராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

என்ன குறை நீர் வைத்தீர் எமக்கிந்த வாழ்வினிலே
இந்த குறை நீரில்லை இனியெம் வாழ்விலென்று
சொல்லி அறையுது சோகம் ஒவ்வொரு கணப் பொழுதும்,
விம்முகின்ற எம் துயர் விளம்ப
ஒரு வகையின்றி செய்துஇரண்டாண்டு பறந்தது!

நீர் இல்லாத குறை எமை எப்பொழுதும் எரித்திடவிழிநீர் வற்றா,
உம் நினைவும் வற்றா !புது செடிகளும் கொடிகளும் மலர்களும்
இக்குடும்ப வனத்தில் தளிர்க்கின்றன,அடி வேரான
உம் நினைவுகளும் வழிகாட்டலும்
அடியொற்றி வரும் எம்முடனே!!

அம்மாவுக்கு அம்மாவாய் அப்பாவுக்கு அப்பாவாய்
ஆசானுக்கு ஆசானாய் அரவணைத்த அம்மாவாய்
பேறு பெற்ற எம் மகிழ்வில்
பேயின் கண்கள் பட்டதுகூறு போட்டு போனான் காலன்
கொடுந்துயர் தந்து ஆண்டு இரண்டானது

வீடு பெற்று போனீர் விடை பெற்று
விண்ணேகி கூடியங்கு கொண்டாட
கொண்டவனும் பெற்றவனும்
வாரியெடுத்தும்மை வடிவாக இருத்தி வைப்பர்
அவர் தேடிப் பார்த்திருக்கிறோம்
மீண்டும் உமைசந்திக்க மிகு காலமாகாது காண் !

வருந்தியழைத்தாலும் திரும்பி வரவியலா
தொலைவுபொருந்தி போனீர்
மனமுற்று எம் உறவேஇருந்து
எம் சீர் பார்த்தது போதுமென்று நினைந்து கருதி
வெளியேறினீரோ கனவாழ்வு போதுமென்று?
இருப்பதும் இறப்பதும் இறை தந்த விதியென்று
மனம் பொறுத்து காத்திருக்கிறோம்
கண்ணீர் அஞ்சலிகளூடே,அம்மா!!!

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.