மரண அறிவித்தல்

In loving memory of
Kanakasabhai Maheswaran
Age 88July 20, 1928 – August 8, 2016
- Born in
- Nallur
- Lived in
- Colombuthurai, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூர் செட்டித்தெருவைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை சுவாமியார் வீதி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை மகேஸ்வரன் அவர்கள் 08-08-2016 திங்கட்கிழமை அன்று நல்லூரான் பாதக் கமலத்தை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை மங்கையர்க்கரசி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சண்முகம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
Dr. ஜெகரஞ்சிதம் அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீராகவன், பவானி, கபிலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான திருஞானசம்பந்தர், விக்னராஜா, தையல்நாயகி, மற்றும் கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கெளரி, நடேஸ்வரன், வாசினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற நித்தியகல்யாணி, இமயவல்லி, ராமலிங்கம், மகாதேவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரதீப், அஞ்சலி, குமரன், ஜனனி, நிலானி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 10-08-2016 புதன்கிழமை அன்று பி.ப 04:00 மணிமுதல் A F Raymond Ltd, 115 D S Senanayake Mawatha, Colombo 8 எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 11-08-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 01:30 மணியளவில் A F Raymond Ltd, 115 D S Senanayake Mawatha, Colombo 8 எனும் முகவரியில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

