Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kandavanam Thurairatnam

In loving memory of

Kandavanam Thurairatnam

Age 75December 1, 1940 – July 9, 2016

Born in
Karaveddi East
Lived in
Kirulapone

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கரவெட்டி கிழக்கு கட்டைவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கிருலப்பனையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தவனம் துரைரட்ணம் அவர்கள் 09-07-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நவரத்தினம்(புகையிரத சிரேஷ்ட பாதுகாப்பு பரிசோதகர்) இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

நவநீதன்(லண்டன்), நவரூபன்(ராஷ் பிரயாண முகவர்- கனடா), நவராஜன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Dr. துரைராசா, சத்தியலீலா, சந்திரலீலா, சமாதானலீலா, சத்தியபாமா, சாந்தா, காலஞ்சென்ற இரத்தினராசா(தயா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரபா(லண்டன்), திருச்செல்வி(வாகன சாரதி பயிற்றுவிப்பாளர்- கனடா), சிந்துஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தேம்பாமலர், சீதாமலர்(லண்டன்), பத்மாமலர்(அவுஸ்திரேலியா), தயாளமலர்(லண்டன்), நேசமலர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிதுஷா, நிவேஸ், தீப்தி, தீபிதா, லஷ்சிகா, ரதீன், அனுஷ்கா(லாலா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 13-07-2016 புதன்கிழமை அன்று கொழும்பு கிருலப்பனையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, யாழ். கரவெட்டியில் உள்ள அவரது இல்லத்திலும் பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதிக்கிரியை 15-07-2016 வெள்ளிக்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் நடைபெற்று கரவெட்டி வேருண்டை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
மதுரை இல்லம்,
கரவெட்டி,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.