1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kandiah Thirunavukarasu
Age 90September 5, 1930 – June 20, 2021
- Born in
- Pannalai
- Lived in
- Pannalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தெல்லிப்பழை பன்னாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இளைப்பாறிய அதிபர் அமரர் கந்தையா திருநாவுக்கரசு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று சென்றதையா ஆறவில்லை எம் துயரம்
ஆறுதல் எமக்கு சொல்வதற்கு நீங்கள் இல்லையே !
ஒளி தரும் சூரியனாக இருள் அகற்றும்
நிலவாக ஊர் போற்றும் நல்லவனாக
பார் போற்றும் வல்லவனாக
வாழ்வாங்குவாழ்ந்து- எங்களை
வாழவைத்த தெய்வமே
உங்கள் ஒழுக்கம் நற்பண்பு மதிப்புகள் யாவும்
எங்கள் வாழ்வில் என்றென்றும்
வழிகாட்டியாக இருக்கும்!
பாசத்தின் பிறப்பிடமாய்
பாரினிலே நேசத்துடன் எங்களை
ஆளாக்கி நேர்மையுடன்வாழ்ந்தீர்களே அப்பா !
எங்களுடைய வெற்றிகளுக்குப் பின்னால்
நீங்கள் இருந்தீர்கள்
தோல்விகளுக்குப் பின்னால் தோள் கொடுத்தீர்கள்
மறக்க முடியவில்லை அப்பா !
வருடங்கள் எத்தனைசென்றாலும்
எம் நெஞ்சை விட்டு அகலாது
உங்கள்நினைவுகள் அப்பா !
ஆயிரம் ஆயிரம் உறவுகள்இருந்தாலும்
அப்பா என்றழைக்க நீங்கள்
எமதருகில் இல்லையே
கண்மணி போல் எம்மைக்காத்த
அன்புத் தெய்வமே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

