1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா திருநாவுக்கரசு
வயது 905 செப்டம்பர், 1930 – 20 ஜூன், 2021
- பிறந்த இடம்
- பன்னாலை
- வாழ்ந்த இடம்
- பன்னாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பழை பன்னாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இளைப்பாறிய அதிபர் அமரர் கந்தையா திருநாவுக்கரசு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று சென்றதையா ஆறவில்லை எம் துயரம்
ஆறுதல் எமக்கு சொல்வதற்கு நீங்கள் இல்லையே !
ஒளி தரும் சூரியனாக இருள் அகற்றும்
நிலவாக ஊர் போற்றும் நல்லவனாக
பார் போற்றும் வல்லவனாக
வாழ்வாங்குவாழ்ந்து- எங்களை
வாழவைத்த தெய்வமே
உங்கள் ஒழுக்கம் நற்பண்பு மதிப்புகள் யாவும்
எங்கள் வாழ்வில் என்றென்றும்
வழிகாட்டியாக இருக்கும்!
பாசத்தின் பிறப்பிடமாய்
பாரினிலே நேசத்துடன் எங்களை
ஆளாக்கி நேர்மையுடன்வாழ்ந்தீர்களே அப்பா !
எங்களுடைய வெற்றிகளுக்குப் பின்னால்
நீங்கள் இருந்தீர்கள்
தோல்விகளுக்குப் பின்னால் தோள் கொடுத்தீர்கள்
மறக்க முடியவில்லை அப்பா !
வருடங்கள் எத்தனைசென்றாலும்
எம் நெஞ்சை விட்டு அகலாது
உங்கள்நினைவுகள் அப்பா !
ஆயிரம் ஆயிரம் உறவுகள்இருந்தாலும்
அப்பா என்றழைக்க நீங்கள்
எமதருகில் இல்லையே
கண்மணி போல் எம்மைக்காத்த
அன்புத் தெய்வமே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

