31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Kanthasamy Sivasubramaniam
Age 70September 21, 1947 – September 15, 2018
- Born in
- Kondavil West
- Lived in
- யாழ் கோண்டாவில் கிழக்கு
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு பொற்பதி வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி சிவசுப்பிரமணியம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.
நீங்கள் எமை விட்டுச் சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!
நினைவுகள் தான் எம்மிடம்
நிஜத்தில் ஆண்டவன் சன்னிதானத்தில்
ஆறாத் துயிலில் கலந்திருக்கும் உங்கள்
பாதங்களில் கண்ணீர்த் துளிகளாலே
ஆராதனை செய்கின்றோம் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தி பெற.....ஓம் சாந்தி!
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 14-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெற்று பின்னர் 15-10-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும் வீட்டுக்கிருத்திய நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், மதிய போசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
கந்தசாமி சிவசுப்பிரமணியம் அவர்களின் இறப்பின் போது துயரத்தில் பங்குபற்றிய அனைவருக்கும், தொலைபேசி அழைப்புக்கள் மூலம் தொடர்புகொண்டு அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும், மலர் வளையங்களை சமர்பித்தவர்களுக்கும் மேலும் அன்னார் நோயுற்றிருந்த போது பல வழிகளிலும் உதவிகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்கிய யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவர்களுக்கும், தாதிமார்களுக்கும் மற்றும் சக ஊழியர்களுக்கும், எமது உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
160, பொற்பதி வீதி,
கோண்டாவில் கிழக்கு,
கோண்டாவில்,
யாழ்ப்பாணம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

