ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

கந்தசாமி சிவசுப்பிரமணியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தசாமி சிவசுப்பிரமணியம்

ஓய்வுபெற்ற நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர்

வயது 7021 செப்டம்பர், 1947 – 15 செப்டம்பர், 2018

பிறந்த இடம்
கோண்டாவில் மேற்கு
வாழ்ந்த இடம்
கோண்டாவில் கிழக்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு பொற்பதி வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி சிவசுப்பிரமணியம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.

நீங்கள் எமை விட்டுச் சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!

நினைவுகள் தான் எம்மிடம்
நிஜத்தில் ஆண்டவன் சன்னிதானத்தில்
ஆறாத் துயிலில் கலந்திருக்கும் உங்கள்
பாதங்களில் கண்ணீர்த் துளிகளாலே
ஆராதனை செய்கின்றோம் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தி பெற.....ஓம் சாந்தி!

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 14-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெற்று பின்னர் 15-10-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும் வீட்டுக்கிருத்திய நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், மதிய போசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

கந்தசாமி சிவசுப்பிரமணியம் அவர்களின் இறப்பின் போது துயரத்தில் பங்குபற்றிய அனைவருக்கும், தொலைபேசி அழைப்புக்கள் மூலம் தொடர்புகொண்டு அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும், மலர் வளையங்களை சமர்பித்தவர்களுக்கும் மேலும் அன்னார் நோயுற்றிருந்த போது பல வழிகளிலும் உதவிகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்கிய யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவர்களுக்கும், தாதிமார்களுக்கும் மற்றும் சக ஊழியர்களுக்கும், எமது உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
160, பொற்பதி வீதி,
கோண்டாவில் கிழக்கு,
கோண்டாவில்,
யாழ்ப்பாணம்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 17 செப்டம்பர், 2018மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.