4ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Karthikesu Kulanayagam
Age 69September 7, 1946 – August 31, 2016
- Born in
- Naranthanai North
- Lived in
- Colombo Kotahena
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகேசு குலநாயகம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பு குலதெய்வமே
பாசம் என்னும் பெரும் கயிற்றால் எம்
அனைவரையும் கட்டி அரவணைத்து
முன்னேற்றி வைத்த எமது தந்தையே
விழுதுகள் நாம் விம்முகின்றோம்
ஆண்டு நான்காகியும் ஆறவில்லை எம்மனம்
விழிகளில் கண்ணீர் காயவில்லை
காலங்கள் கடந்தாலும் மாறாது
உங்கள் நினைவலைகள்
எங்கள் துன்பங்கள் அனைத்தையும்
உங்கள் இதயத்துள் தாங்கி
உறக்கத்திலும் விழிப்பிலும் எம்மைக்
கண்ணிமைபோலக் காத்து
ஒளிமிகுந்த வாழ்க்கைப் பாதையில்
எம்மை இட்டுச் சென்ற தந்தையே
இன்னும் நீங்கள் காட்டிய பாதையிலேயே
உங்கள் நினைவுகளைச் சுமந்தபடியே நாம்
வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் அப்பா
என்றும் உங்கள் பசுமை நினைவுகளுடன் மனைவி,
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

