1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Karthikesu Mahadevan
Age 68March 26, 1947 – October 17, 2015
- Born in
- Ezhalai East
- Lived in
- Chankanai, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், சங்கானை, சிலாபம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த கார்திகேசு மகாதேவன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஏழாலை கிழக்கில் உதித்த உதய சூரியனே
உங்கள் பாதம்பட்ட செம்மணலும், வயல்வெளிகளும்
ஒருகணம் மௌனித்தப்பா உங்கள் பிரிவால்!
அப்பா நீங்கள் எம்மைவிட்டு பிரிந்து ஓராண்டு ஆனபோதும்
உங்கள் நினைவுகள் எம்நெஞ்சை
ஆர்ப்பரித்து கொண்டு உள்ளதப்பா
அப்பா உங்கள் பூமுகம் காணாது அம்மா வாடி நின்ற
வேளையிலும் எம்மால் அவர்களுக்கு வார்த்தைகளால்
ஆறுதல் கூறமுடியவில்லையப்பா
ஆலயம் சென்ற அப்பி எப்போது திரும்புவார் என்று
ஒன்றும் அறியா உங்கள் பேரப்பிள்ளைகள் வினாவும் போது
எம் நெஞ்சம் கனக்குதப்பா
நீங்கள் எமக்காக அல்லும் பகலும் அயராது உழைத்து
சிந்திய ஒவ்வொரு துளி வியர்வையும்
இன்று பெருவிருட்ஷமாகி நிற்குதப்பா
நீங்கள் பூவுலகை விட்டு மறைந்த போதும்
உங்களது ஆத்ம வழிகாட்டலிலும்
உங்களது நினைவுகளுடனும்
எமது வாழ்க்கை பயணம் தொடரும் அப்பா...
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
அன்னாரின் ஆத்மசாந்தி பிரார்த்தனை 05-10-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் No: 06, Kingsbridge Cres, Southall UBI 2DL, UK எனும் முகவரியில் உள்ள இல்லத்தில் நடைபெறும், இந் நிகழ்விலும் அதனை தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No: 06,
Kingsbridge Cres,
Southall UBI 2DL,
UK.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

