மரண அறிவித்தல்

In loving memory of
Kathiravelu Balasubramaniyam
Age 92January 7, 1925 – February 9, 2017
- Born in
- Pungudutivu 2nd Ward
- Lived in
- Vannarpannai, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு பாலசுப்பிரமணியம் அவர்கள் 09-02-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கலஞ்சென்றவர்களான Dr. கதிரவேலு இரத்தினம் தம்பதிகளின் ஏக புதல்வரும், சரவணையூர் பள்ளம்புலத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(புகையிரத நிலைய அதிபர்) மரகதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகிர்தம்(இளைப்பாறிய ஆங்கில ஆசிரியை) அவர்களின் பாசமிகு கணவரும்,
பாலினி, பாலசாயி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பரமேஸ்வரி(லண்டன்), கமலாதேவி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சாம்பசிவரகு அவர்களின் அன்பு மாமனாரும்,
ரஞ்சிதமலர், மகாலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, நாகபத்மநாதன், கனகசபை, மற்றும் நல்லம்மா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற நடராசா(கணக்காளர்), சேனாதிராஜா(பொறியியலாளர்- கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
பவன் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

