9ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kathirgamu Vikneshwaran
Age 32March 29, 1969 – December 30, 2001
- Born in
- Pungudutivu 10th Ward
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபுங்குடுதீவு 10ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிர்காமு விக்கினேஸ்வரன் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன் உன் அகாலமரணம் ஏற்படுத்தி விட்டுபோன சூனிய இடைவெளியை இன்று அசைப்போட்டு பார்க்கிறேன் தம்பி,
நீ மறைந்து ஒன்பது ஆண்டுகள் ஆன போதும்
அன்பின் திருவுருவே பாசத்தின் பிறப்புறுவே
பண்பின் மறுபிறப்பே புன்னகையின் புதுக்குருத்தே
அழகான உன்வதனம் அடக்காத காளைத் தோற்றம்
கபடமறியா கட்டாள் வெள்ளம் கள்ளமில்லா
உன் தூய உள்ளம் மறப்போமோ நாம்
கடந்த மாதம் 25ம் திகதி பரீஸ் நீதிமன்றம்
உன் மரண மர்மமுடிச்சை அவிழ்த்து
தீர்ப்பு சொன்ன அந்த செய்தி அறிந்து
குமுறிக்கிடந்த நெஞ்சு அமைதி கொண்டதடா தம்பி
எது எப்படியோ
அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும் என்றும்
நான்மறை தீர்ப்பு இன்றும் எமக்கெல்லாம்
ஆறுதல் தருகுதடா தம்பி
ஒன்பது ஆண்டு ஏக்கம் தீர்ந்ததடா தம்பி
உன் மரணச் செய்தி கேட்டும் அறிந்தும்
எங்களுக்கு ஆறுதல் கூறி
அனுசரனை புரிந்த அனைத்து நல்நெஞ்சங்களுக்கு
எங்களின் இதயம் கனிந்த நன்றிகள்...!
— சகோதரி, சகோதரர்கள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

