ஆறுதல்

9ம் ஆண்டு நினைவஞ்சலி

கதிர்காமு விக்கினேஸ்வரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கதிர்காமு விக்கினேஸ்வரன்

வயது 3229 மார்ச், 1969 – 30 டிசம்பர், 2001

பிறந்த இடம்
புங்குடுதீவு 10ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிர்காமு விக்கினேஸ்வரன் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன் உன் அகாலமரணம் ஏற்படுத்தி விட்டுபோன சூனிய இடைவெளியை இன்று அசைப்போட்டு பார்க்கிறேன் தம்பி,

நீ மறைந்து ஒன்பது ஆண்டுகள் ஆன போதும்
அன்பின் திருவுருவே பாசத்தின் பிறப்புறுவே
பண்பின் மறுபிறப்பே புன்னகையின் புதுக்குருத்தே
அழகான உன்வதனம் அடக்காத காளைத் தோற்றம்

கபடமறியா கட்டாள் வெள்ளம் கள்ளமில்லா
உன் தூய உள்ளம் மறப்போமோ நாம்
கடந்த மாதம் 25ம் திகதி பரீஸ் நீதிமன்றம்
உன் மரண மர்மமுடிச்சை அவிழ்த்து
தீர்ப்பு சொன்ன அந்த செய்தி அறிந்து
குமுறிக்கிடந்த நெஞ்சு அமைதி கொண்டதடா தம்பி

எது எப்படியோ
அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும் என்றும்
நான்மறை தீர்ப்பு இன்றும் எமக்கெல்லாம்
ஆறுதல் தருகுதடா தம்பி
ஒன்பது ஆண்டு ஏக்கம் தீர்ந்ததடா தம்பி

உன் மரணச் செய்தி கேட்டும் அறிந்தும்
எங்களுக்கு ஆறுதல் கூறி
அனுசரனை புரிந்த அனைத்து நல்நெஞ்சங்களுக்கு
எங்களின் இதயம் கனிந்த நன்றிகள்...!

— சகோதரி, சகோதரர்கள்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.