45ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Krishnapillai Kirupananthan
Age 38July 28, 1979 – July 9, 2018
- Born in
- Velanai
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிறிஸ்ணபிள்ளை கிருபானந்தன் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலி.
தலைநகரிலே தங்கத் தலைவனாய்
சிறந்த சமூகத் தொண்டனாய் மக்களின்
இதயம் வென்றவன் ஐயா நீங்கள்!
இன்றுடன் காலன் உங்களை தன்னுடன்
அழைத்துச் சென்று 45 நாட்கள் ஆகியதோ!
தாய் தந்தைக்கு தலைமகனாக
சகோதர சகோதரிகளுக்கு அண்ணணாக
கட்டிய மனைவிக்கு பாசமிகு கணவனாக
அன்பு மகனுக்கு பாசமிகு தந்தையுமாய்
வழிகாட்டியுமாய் உங்கள் பணியில்
கடமை தவறியதில்லையே ஐயா!
உறவினர்கள் சுற்றத்தார் நண்பர்கள்
என்று யாவருடனும் நல்லுறவு
கொண்டீர் ஐயா!
இறைவன் ஏன் எங்களிடமிருந்து
உங்களை பறித்துக்கொண்டார்.
ஏங்கித் தவிக்கின்றோம் ஐயா!
மீளாத்துயிலும் நீங்கள் எப்போது
மீண்டெழுவீர்கள் என்று!
என்றாலும் இறைபாதம் அடைந்த
உங்கள் ஆத்மா அமைதி பெறட்டும் என
அகிலம் படைத்த இறைவனிடம் ஆராதனை
செய்கின்றோம் ஐயா உங்களுக்காக!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

