1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kumarasami Selvanayagam
Age 66April 12, 1942 – March 22, 2009
- Born in
- Mandaitivu
- Lived in
- Kilinochchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமண்டைதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் இலக்கம் 277 உதயன் நகர் கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட அமரர் குமாரசாமி செல்வநாயகம் அவர்களின் ஓராண்டு நினைவஞ்சலி
பண்டைத்தமிழ்காத்த மண்டை தீவு மாமகனே
எம் பாராண்ட உமையிழந்து ஓராண்டு ஓடிய பின்னும்
அன்பு தீராத உங்கள் முகம் தினம் தேடுகிறது எங்கள் அகம்
பெற்றணைத்து நிறைவாய் நெஞ்சை வென்றீர்கள்
எத்தனை உறவாய் எமக்குள்ளே நின்றீர்கள்
இத்தனை மறைவாய் ஏனய்யா சென்றீர்கள்
அறிவை பெருக்கிவிட்ட ஆசானே
உங்கள் சரிவை ஏற்றழ எம் இதயம் இரும்பல்லவே
ஏர்பிடித்து ஊர்படித்த உத்தமரே
நாங்கள் நேர் இடிந்து நெஞ்சொடிந்து நிற்கிறோம் ஐயா
சிகரத்தை தொடவைத்து விட்டு
நீங்கள்துயரத்தை தொட்டு விட்ட மாயமென்ன
விவசாய விற்பனராய் மண்டை தீவு மண்ணில்
வீதியுலா வந்த வித்துவானே உங்கள் அன்பின்றி
நாதியற்று கிடக்கின்றோம் ஐயா
காலனுக்குள் மண்டியிட்ட மாமகனே உங்கள் கல்வெட்டில்
எம் கைவைத்து சபதமெடுக்கின்றோம் உங்கள் அறிவையும்
பெருமையையும் அகத்திலே சுமந்து நிஜத்திலே ஜெகத்திலே எழுவோம்
நாம் காட்டோம் இனி ஒரு பேதம் இனி காண்போம்
தொழுவோம் உங்கள் பெரும் பாதம்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
— என்றும் நீங்காது உங்கள் நினைவலைகள் எமைவிட்டு மனைவி,பிள்ளைகள்,மருமக்கள்,சகோதரர்கள்,பேரப்பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

