31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Kumarasamy Ratnasingam
Age 58January 18, 1960 – January 28, 2018
- Born in
- யாழ் கச்சேரியடி
- Lived in
- Drancy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குமாரசாமி இரத்தினசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
இன்றோடு முப்பத்தொரு நாட்கள் கடந்தாலும்
உங்கள் அன்பொழுகும் தங்க முகம் மறந்தோமில்லை
இன்றும் உங்கள் பிரிவால் எம் இதயம் கலங்குகின்றது!
என் அன்பிற்கும் ஆசைக்கும் உரியவரே
கடைசிவரை காக்காது சடுதியில் சென்றதேன்!!
கலங்கி நிற்கின்றேன், கதறி அழுகின்றேன்
கனவாகி போகாதோவென்று கடவுளை வேண்டி!!
எங்கு சென்றீர்கள் எனை விட்டு!
எல்லாமே இழந்தது போல் என் மனம் தவிக்கிறதே!
நித்தம் கண்ணீர் வடிகிறது!
கண்மூடித் திறக்கும் நேரத்தில் எங்களைத்
தவிக்கவிட்டு நிரந்தரமாக பிரிந்தீர்களே அப்பா
உங்களுக்கு நிகர் எங்களுக்கு யார் அப்பா?
எங்கு பார்த்தாலும் உங்கள் முகம் தான் தெரிகிறது!
மாதம் ஒன்றானாலும் அழியாது எம் துயரம்
மறையாது உங்கள் நினைவு
அளவில்லா அன்பையும் அளக்க
முடியாத பாசத்தையும் அளவில்லாமல்
கொடுத்து விட்டு எங்கு தான் சென்றீரோ?
நீங்கள் இல்லாத இந்த உலகம் எங்களுக்கு
இனி வெறும் பாழடைந்த மண்டபம்தான்
உங்களை இழந்து உயிர்வாழும்
நாங்களும் இனி உணர்வற்ற
வெறும் நடைப்பிணங்கள் தான்
உங்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி நிற்கிறோம்.
பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள்
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 27-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்று பின்னர் 03-03-2018 சனிக்கிழமை அன்று இல.17 Rue Voltaire, 93700 Drancy, France என்னும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகின்ற மதியபோசன நிகழ்வில் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் இந்த அழைப்பிதலை ஏற்று தங்கள் குடும்ப சகிதம் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். எமதுயரில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
— மனைவி(லலிதா), பிள்ளைகள்(ரஜிதா, ரஜிபன், கார்தீபன்)
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

