1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Mageshwari Sabaratnam
Age 67July 17, 1942 – August 2, 2009
- Born in
- Jaffna
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி சபாரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
வாழ்க்கையில் நாம் உங்கள் வழி வந்தோம்
பாசத்தில் உங்களை பற்றியிருந்தோம்
துன்பத்தில் உங்கள் தோள் சாய்ந்தோம்
இன்பத்தில் உங்களுடன் கலந்திருந்தோம் - அம்மா!!!
எங்கள் குடும்பத் தலைவியான
நீங்கள் எம்மைவிட்டு தெய்வமாகி
ஓராண்டு ஆனாலும் மறையாமல்
உங்கள் நினைவுகள் எங்களுடன்
என்றும் உறவாடிய வண்ணமே உள்ளது...
பார்க்கும் இடமெல்லாம் நீங்கள் நிற்பதுபோல்
நீங்கள் எம்முடன் வாழ்ந்த காலங்கள்
எம்முள்ளே நித்தமும்
அலைமோதிய வண்ணம் உள்ளது அம்மா!!!
உங்கள் கைபிடித்து உங்கள் ஆதரவில்
உங்கள் வழியிலேயே உங்கள் பின்னால்
நடந்தோம் அம்மா.. ஆனால் இன்று
கைபிடித்து அரவணைக்க நீங்கள்
இல்லையே எங்களுடன்..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
— கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரி குடும்பம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

