Aruthal

31ம் நாள் நினைவஞ்சலி

Photo of Mahalingam Selvakumar

In loving memory of

Mahalingam Selvakumar

Age 54June 17, 1963 – January 26, 2018

Born in
Trincomalee
Lived in
Achchuveli, Switzerland

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். அச்சுவேலியை வசிப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கம் செல்வகுமார் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

வாழ்வியல் தத்துவம் நாங்கள்
அறியாது தவிக்கின்றோம்
பிறப்பும் இறப்பும் உலக
இயக்கத்தின் கட்டாயம்,
ஆனால் பாசமும் பந்தமும்
பிரிவில்லாத் தொடர் வலைகள்!

ஆண்டவன் படைப்பினை
ஆழமாய் பார்த்தாலும்!
பாசமாய் உங்களின்
பண்பினை நினைகின்றோம்!
நேசமாய் உங்களின்
புன்னகையை ரசிக்கின்றோம்!

கனவுகள் நிறைவேறும் காலமதில்
காலனவன் உங்களை அழைத்துவிட்டான்
உங்கள் கனவுகளை கலைத்து விட்டான்
காலத்தின் மடியில் துயில் கொள்ளும்
உங்களை தினம் தினம் நினைத்து
ஒன்று கூடி நாங்கள் உறவாடும் போது
எங்கள் மத்தியில் நீங்களும் வந்து
உறவாடுவீர்கள் என்று நம்புகின்றோம்!
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 25-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை Paroisse de Bellevaux / st luc Aloys Fauquez 21 Case Postale129, 1000 Lusanne18, Switzerland எனும் முகவரியில் நடைபெறவுள்ளது. எங்கள் அன்புத் தெய்வம் நோயுற்றிருந்த வேளை ஓடோடி வந்தவர்களுக்கும் எமக்கு ஆறுதல் கூறி உறுதுணையாக இருந்தவர்களுக்கும், எல்லா வழிகளிலும் உதவிகள் புரிந்தோர்களுக்கும் அன்புத் தெய்வத்தின் மரணச்செய்தி கேட்டு நேரில் ஓடிவந்தவர்களுக்கும் அயல் நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கும், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலி செலுத்தியோருக்கும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் நன்றிகள் பல கூறி நிற்கின்றோம். இந்த அழைப்பிதழை ஏற்று தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து மதிய போசன நிகழ்விலும் கலந்துகொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

— மனைவி, பிள்ளைகள்

Other notices

  1. Obituary · January 26, 2018மரண அறிவித்தல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.