மரண அறிவித்தல்

In loving memory of
Mangayakarsi Rajadurai
Age 86November 27, 1931 – June 17, 2018
- Born in
- Sudhumalai North
- Lived in
- Colombo, Kenton
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா Kent ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மங்கயற்கரசி இராசதுரை அவர்கள் 17-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம்(ஓவசியர்) செல்லாச்சி தம்பதிகளின் கனிஸ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசதுரை(சூரி) அவர்களின் அன்பு மனைவியும்,
யோகாம்பிகை(கனடா), காலஞ்சென்ற மீனாம்பிகை மற்றும் கந்தவேள்(பிரித்தானியா), காலஞ்சென்ற நடனசபேசன் மற்றும் பாலாம்பிகை(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிதம்பரநாதன், Dr. வத்சலா, சுபேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற நல்லநாயகி சின்னத்தம்பி மற்றும் பாலசுந்தரம்(பாலா- Ram Bala, கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, மகாலிங்கம், தங்கம்மா கந்தையா ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
காலஞ்சென்ற கதிரவேலு அவர்களின் அன்பு மருமகளும்,
சாரதாமணி விநாயகமூர்த்தி, காலஞ்சென்ற சண்முகநாதன் மற்றும் சிவலோகநாதன், யோகநாதன், மீனாம்பாள் நவரட்ணம், காலஞ்சென்ற பவளம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், இராமலிங்கம், சிவபாக்கியம் துரைவீரசிங்கம், விஜயறட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Dr. நிருத்திகா சஞ்சீவன், லாவண்யா தயாகரன், பவித்ரா, காயத்திரி, கார்த்திகேயன், சத்தியன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

