31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Manikkam Sivabalan
Age 58December 27, 1960 – February 4, 2019
- Born in
- Pungudutivu 6th Ward
- Lived in
- Holland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Oudenbosch ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாணிக்கம் சிவபாலன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம்(சுப்பிரமணியம்), அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்.
நிழல் போல் இருந்தாயே
நினைவாய் மாறிவிட்டாய்
கண்ணுக்கு ஒளியாய்
நெஞ்சில் நினைவாய்
எம் நெஞ்சமெல்லாம் நிறைவாய் இருந்து விட்டு
எங்கு சென்றாய்?
வளர் பிறையாய் நாம் வளர
தேய் பிறையாய் தேய்ந்து போன
தியாக சுடரே
எங்கள் உணர்வோடு கலந்த உறவே
இன்று உங்கள் பிரிவின் நினைவால் வாழ்கின்றோம்
அதனால் உணர்வின் வலியை எங்கள் கண்ணீரில்
அஞ்சலியாக காணிக்கை ஆக்குகின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் ஆத்ம சாந்தி பிரார்த்தனை 06-03-2019 புதன்கிழமை அன்று எமது இல்லத்தில் நடைபெறும். இந் நிகழ்விலும் 09-03-2019 சனிக்கிழமை அன்று De Parel Pr. Margrietstraat 15, 4793 CB Fijnaart, Netherlands எனும் முகவரியில் நடைபெறும் மதிய போசனத்திலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

