1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Markandu Manokaraseelan
Age 54January 24, 1962 – November 9, 2016
- Born in
- Kili Uruththirapuram
- Lived in
- Cergy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அனலைதீவைப் பூர்வீகமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் 10ம் வாய்க்காலை வதிவிடமாகவும், பிரான்ஸ் Cergy-Pontoise ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மார்க்கண்டு மனோகரசீலன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
சிந்தை எல்லாம் நிறைந்த
சீலத் திருவுருவே- தந்தையே
இப்பூலோக வாழ்வுதனை நீத்து
ஆண்டு ஒன்று கடந்ததுவோ?
உங்களை உருக்கி எங்களை
உருவாக்கிய உன்னதமே!
வாழ்வான உயர்வாழ்வு எமக்கு
அமைத்திட்டீர்கள்
உங்களை வாழவைக்கும் காலம் இனி
என மகிழ்வுற்று இருக்கையிலே
காலனவன் செய்த சதி இதுவோ?
உங்களை இழந்த கணம்முதல்
உளம் சிதைந்து துடிக்கின்றோம்
உருத்திரபுர உறவுகளின் உயர்வே
எங்கள் வாழ்வாதாரமே!
எங்கள் மனமெல்லாம் நிறைந்து
பேரன்பில் வாழ்கின்றீர்கள்
அழிவற்ற ஆன்மாவினால் எங்களை
நாளும் காத்தருளும் தெய்வமே!
ஆன்ம சாந்திக்காக பொறிக்கடவை
அம்மன் அருள் வேண்டிப் பணிகின்றோம்
ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!
அன்னாரின் ஓராண்டு நினைவஞ்சலி நினைவாக குடும்பத்தினரால் 19-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று Loca'Salle Eragny, 6 Rue de la Palombe, 95610 Éragny, France எனும் முகவரியில் வழங்கப்படும் மதியபோசனத்தில் கலந்துகொண்டு எங்களை ஆறுதல்படுத்துமாறு உற்றார், உறவினர்கள், நண்பர்களை அன்புடன் அழைக்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

