31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Maryjelan Roxy
Age 46January 19, 1963 – January 17, 2010
- Born in
- Thalaiyadi
- Lived in
- Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசெங்கதிர் இல்லம், தாழையடியைப் பிறப்பிடமாகவும் இல-01 யாழ்ப்பாணம் கோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் மேரி ஜெலன் றொக்ஸி வில்பிறட் செல்வக்குமார் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அடி வயிற்றிலே எரிந்த தீ-என்றும்
ஆறாதே ஆறாதே அக்கா
நாடித்துடிப்பிலே அடித்த புயல்-என்றும்
ஓயாதே ஓயாதே அக்கா
மடி பிடித்து கெஞ்சினோம்-அக்கா
படியளந்தவன் பிடிமண் போட்டானே
விடியாத இருளிலே தவிக்கின்றோம்-இனி நாங்கள்
விடிமுகத்தை எங்குதான் பார்ப்போமோ
அடித்த சுனாமியிலே தப்பவைத்தான்-இடையில் ஏனோ
நொடிப்பொழுதினிலே இழக்கவிட்டான்
புன்னகையிலே உந்தன் புன்னகையிலே அகம் மகிழ்ந்தோம்-இப்போ
கண்ணீரிலே எங்கள் கண்ணீரிலே முகம் கழுவுகிறோம்
மறுபிறப்பு உண்மையில் உண்டென்றாலோ-அக்கா
மறுபடியும் உன் உடன்பிறப்பாய் பிறக்க வரம் தாருமே.
இவரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக16-02-2010 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு KENTON சகல புனிதர்கள் தேவாலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
— பிரிவால் துயருறும் தங்கை குடும்பத்தினர், தம்பி
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

