Aruthal

31ம் நாள் நினைவஞ்சலி

Photo of Mathura Sivakumar

In loving memory of

Mathura Sivakumar

Age 19October 29, 1997 – December 1, 2016

Born in
Denmark
Lived in
Denmark

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

டென்மார்க்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த மதுரா சிவகுமார் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

பொன்னகை பூட்டிப் புன்னகை காட்டிப்
பூத்திட மறந்ததும் ஏனோ?
முன்னைய விதியோ முன்னுரை எழுதி
முடித்திட வைத்ததோ வாழ்வை
அன்னையை அன்புத் தந்தையை உற்ற
அண்ணனை விட்டகன் றாயே!
சின்னவள் உந்தன் சிரிப்பொலி வீட்டில்
தினம் இனி இல்லையே! துயரே!

சிட்டெனப் பறந்து சிலிர்த்திடும் வேளை
சீக்கிரம் வந்ததேன் சாவு!
மட்டிலாச் சோகம் கொட்டுதே எங்கும்
வார்த்தைகள் இல்லையே சொல்ல
தொட்டிலில் போட்டுத் தோள்களில் சுமந்தோர்
தூங்கிட வழியினி யேது
பொட்டொடு பூவும் புதுமணம் எல்லாம்
போச்சுதே! கண்களில் நீரே!

பெரும்துயர் சூழப் பெற்றவர் நெஞ்சுள்
பேரிடி நேர்ந்ததும் ஏனோ?
நெருப்பினில் வீழ்ந்து துடித்திடல் போல
நேர்ந்ததே பேரிடர் இங்கு!
தரும்சுகம் அழிக்கக் கூற்றனும் வந்தே
தனித்துனைக் கவர்ந்ததும் ஏனோ?
மருத்துவமனைக்கு மகிழ்வோடு போனாய்
மரணத்தைப் பரிசெனப் பெறவோ?

எங்கள் கண்மணிக்கு ஏற்பட்ட துயர் சம்பவத்தினால் நாம் துடித்து நின்ற வேளையில் ஓடோடிவந்து எம்மை தாங்கிக்கொண்டு எமக்கு ஆறுதல் அளித்த எமது உடன்பிறப்புகள், உறவினர்கள், அன்பு நண்பர்கள் மற்றும் எல்லா வகைகளிலூம் எமக்கு உதவிகள் புரிந்தும், வெளிநாடுகளில் இருந்தும், நேரில்வந்தும், தொலைத்தொடர்பு சாதனங்கள் ஊடாகவும் எமக்கு ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும், எங்கள் கண்ணொளியைக் காத்துத் தரும்படி கடவுளை பிரார்த்தனை செய்த அன்பு உள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 31-12-2016 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். அதனைத்தொடர்ந்து அன்று மதியம் Cedervej 17, 7400 Herning, Denmark எனும் மண்டபத்தில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · December 2, 2016மரண அறிவித்தல்Read notice →
  2. Anniversary · November 18, 20171ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.