Aruthal

மரண அறிவித்தல்

Photo of Mayilan Kanthsaamy

In loving memory of

Mayilan Kanthsaamy

Age 76October 2, 1939 – December 14, 2015

Born in
Valveddi
Lived in
Valveddi

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வல்வெட்டி தர்மகுலசிங்கம் சனசமூக நிலையத்தினைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மயிலன் கந்தசாமி அவர்கள் 14-12-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மயிலன், கதிராசி தம்பதிகளின் இளைய மகனும், சின்னத்தம்பி பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிவயோகம் அவர்களின் அன்புக் கணவரும்,

கமலலோஜினி(லண்டன்), வாசு(சுவிஸ்), ரஜனி(சுவிஸ்), வசந்தன்(இலங்கை), விஜிதரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பரிமளம், முத்துக்குட்டி, மகாலிங்கம், மற்றும் இளையகுட்டி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சத்தியசீலன்(லண்டன்), ஜெயவனிதா(சுவிஸ்), இராஜேஸ்வரன்(சுவிஸ்), குமுதா(இலங்கை), அனுசாந்தினி(கனடா), ஐயாத்துரை(சுவிஸ்), நாகேந்திரன்(கொலன்ட்), வசந்தி(இலங்கை), சாந்தி(இலங்கை), சுகந்தி(இலங்கை), காலஞ்சென்ற பத்மசீலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லதீபா(கனடா), பிரதாபன்(இத்தாலி), கோகிலவாணி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,

கலையரசன், தமிழரசி, கயல்விழி, சீராளன்(லண்டன்), விதுஷிகா, தனுஷன், நிதுஷன்(சுவிஸ்), சஞ்சைய், துஷாந்தன்(சுவிஸ்), விகாஷ், கேசிகன், கேதுஷன்(இலங்கை), விஷான்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-12-2015 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.