1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
------
Age 59May 4, 1949 – March 6, 2009
- Born in
- Mullai Puthukkudiyiruppu
- Lived in
- Mullai Puthukkudiyiruppu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஇலங்கை நால்கடல் சூழ்ந்திருக்கும் முல்லைத்தீவு எனும் வந்தாரை வாழவைக்கும் வன்னி மண்ணிலே பயன்தரும் வயல்கள், கனிதரும் மரங்கள் நிறைந்த புதுக்குடியிருப்பில் பிறந்து வாழ்ந்து வந்தவேளை கடந்த 06.03.2009 அன்று கொடியவனின் குண்டுக்கு இலக்காகி வானகத்தே சென்றுவிட்டார்.
"பத்துமாதம் சுமந்து பெற்றெடுத்த எமது
பாசத்தை பல வருடங்களாக நாம் நோக்கவில்லை
அம்மா அம்மா என கதறி அழுகின்றோம் ஆனால்
எமது அன்னையின் அடி நிழல் கூட எமக்கு தெரியவில்லை
நீர் ஆசையாக ஈன்றெடுத்த செல்வங்கள் அருகில் இல்லாது
காட்டு மிராண்டியின் குண்டுக்கு இலக்காகி தனியே
தவி தவித்துச் சென்றீரே!
உன் அன்புச் செல்வங்களால் முடியவில்லை
தாயின் முகம்தேடி தவிக்கின்றோம்.
தாய் நீர் கடன் செய்ய முடியாது
உன் அன்புச் செல்வங்கள் கண்ணீர்
மலர்களால் கண்ணீர் துளிகளை காணிக்கையாக்கின்றோம்
"அன்பாக அனைத்துக்கொள்ள அம்மம்மா என்று இருந்தீர்
இன்று நாம் ஆசையாக அம்மம்மா என்று அழைத்திட
எமதருகில் இல்லாது இறையடி சேர்ந்தீரே!
இறையடி இருந்து ஆசிகள் பல தாருங்கள்"
"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று"
எதி்ர்வரும் 23.02.2010 செவ்வாய்க்கிழமை அன்னாரின் 1ம் ஆண்டு கிரிகைகள் எமது இல்லத்தில் இடம்பெறும். அதில் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தாயின் பிரிவால் வாடும் சகோதரன், சகோதரிமார், மைத்துனன்மார், மைத்துனிமார், பெறாமக்கள், பெறாமருமக்கள், பி்ள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
பரமலிங்கம் ரதனா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பே எம் அன்புச்செல்வமே எம்மை விட்டுப்பிரிந்தாயோ
எம் நெஞ்சம் ஆறவில்லை ஆறாய் ஓடுகின்றது
உன் துயரால் வாடி வாடி ஆண்டு ஒன்று ஓடிவிட்டது
உன் பிரிவால் வாடும் அம்மா, அப்பா, சகோதரர்கள்.
— தம்பிஐயா கிருஷ்ணகாந்தன்(காந்தன் - இலண்டன்)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

