ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிஐயா தங்கமணி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தம்பிஐயா தங்கமணி

வயது 594 மே, 1949 – 6 மார்ச், 2009

பிறந்த இடம்
புதுக்குடியிருப்பு
வாழ்ந்த இடம்
புதுக்குடியிருப்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

இலங்கை நால்கடல் சூழ்ந்திருக்கும் முல்லைத்தீவு எனும் வந்தாரை வாழவைக்கும் வன்னி மண்ணிலே பயன்தரும் வயல்கள், கனிதரும் மரங்கள் நிறைந்த புதுக்குடியிருப்பில் பிறந்து வாழ்ந்து வந்தவேளை கடந்த 06.03.2009 அன்று கொடியவனின் குண்டுக்கு இலக்காகி வானகத்தே சென்றுவிட்டார்.

"பத்துமாதம் சுமந்து பெற்றெடுத்த எமது
பாசத்தை பல வருடங்களாக நாம் நோக்கவில்லை
அம்மா அம்மா என கதறி அழுகின்றோம் ஆனால்
எமது அன்னையின் அடி நிழல் கூட எமக்கு தெரியவில்லை
நீர் ஆசையாக ஈன்றெடுத்த செல்வங்கள் அருகில் இல்லாது
காட்டு மிராண்டியின் குண்டுக்கு இலக்காகி தனியே
தவி தவித்துச் சென்றீரே!
உன் அன்புச் செல்வங்களால் முடியவில்லை
தாயின் முகம்தேடி தவிக்கின்றோம்.
தாய் நீர் கடன் செய்ய முடியாது
உன் அன்புச் செல்வங்கள் கண்ணீர்
மலர்களால் கண்ணீர் துளிகளை காணிக்கையாக்கின்றோம்

"அன்பாக அனைத்துக்கொள்ள அம்மம்மா என்று இருந்தீர்
இன்று நாம் ஆசையாக அம்மம்மா என்று அழைத்திட
எமதருகில் இல்லாது இறையடி சேர்ந்தீரே!
இறையடி இருந்து ஆசிகள் பல தாருங்கள்"

"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று"

எதி்ர்வரும் 23.02.2010 செவ்வாய்க்கிழமை அன்னாரின் 1ம் ஆண்டு கிரிகைகள் எமது இல்லத்தில் இடம்பெறும். அதில் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தாயின் பிரிவால் வாடும் சகோதரன், சகோதரிமார், மைத்துனன்மார், மைத்துனிமார், பெறாமக்கள், பெறாமருமக்கள், பி்ள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

பரமலிங்கம் ரதனா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பே எம் அன்புச்செல்வமே எம்மை விட்டுப்பிரிந்தாயோ
எம் நெஞ்சம் ஆறவில்லை ஆறாய் ஓடுகின்றது
உன் துயரால் வாடி வாடி ஆண்டு ஒன்று ஓடிவிட்டது

உன் பிரிவால் வாடும் அம்மா, அப்பா, சகோதரர்கள்.

— தம்பிஐயா கிருஷ்ணகாந்தன்(காந்தன் - இலண்டன்)

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.