நினைவஞ்சலி

In loving memory of
------
Age 22December 3, 1993 – August 24, 2016
- Born in
- Mullai Puthukkudiyiruppu
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சத்தியநாதன் கோபிகாந்தன், சத்தியநாதன் கேனுகன் ஆகியோர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலிகள்.
கண்மணிகளே எங்கள் பொன்மணிகளே
காலன் அவன் ஆட்கொண்டு
ஆண்டு இரண்டு ஆகியதோ
ஆண்டு இரண்டு ஆகியும் எங்கள்
மனம் தணலாய் கொதிக்கிதப்பா
பூமிப்பந்தில் பல மெத்தனங்கள் செய்துவிட்டு
இன்று விண் ஆள சென்றீரோ?
இந்த நித்திலத்தில் நீங்கள் இருந்திருந்தால்
எங்கள் கனவு எல்லாம் பலித்திருக்குமப்பா
இப்போதும் உங்கள் இனிய குரல் எங்கள்
காதோரம் கேட்டுக் கொண்டே இருக்குதப்பா
இந்த பொய்யான உலகத்திலே இன்று
நாங்கள் பொய் வாழ்க்கை வாழுகின்றோம்!
கண்மூடும் நேரம் எல்லாம் நீங்கள்
எங்களுடன் கதை பேசுவது போல் உள்ளதப்பா
காலம் தான் கரைந்தோடிப் போனாலும்
உங்களை எப்படி மறக்க முடியுமப்பா
நீங்கள் இருவரும் இராமாயணத்தில்
வந்த இராம லட்சுமணர்கள் என்பதை
எங்களுக்கு உணர்த்தி சென்றீரோ?
உங்கள் நிஜ வாழ்க்கையில் நாங்கள்
அப்படித்தான் பார்த்தோமப்பா இன்று
அதை உறுதி செய்து விட்டீர்கள்
அண்ணனுக்காக தம்பி உயிர் கொடுத்தானோ!
தம்பிக்காக அண்ணன் உயிர் கொடுத்தானோ!
இது யாருக்கு புரியுமப்பா?
காலன் அவன் உங்களை கடல் என்ற
உருவில் ஆட்கொள்ள வந்தானோ?
ஆடி அடங்குவது தான் வாழ்க்கையப்பா
ஆனால் இந்த சிறு வயதில் உங்களுக்கு ஏன்
இறைவன் தந்தானப்பா!
அம்மா அப்பா என்று சொல்ல எங்களுக்கு
யாரும் இல்லையப்பா !
அதை நினைக்கும் போது நாங்கள் படும் துயரம்
யாருக்குப் புரியுதப்பா!
காலம் என்னும் வழித்தடம் தடம் புரண்டு
போனாலும் திசை மாறும் சூரியன் தான் திசை
மாறிப்பானாலும் நிலையற்ற இவ்வுலகில்
நீர்குமிழி தான் வாழ்க்கை
அந்த வாழ்க்கை உள்ளவரை
உங்கள் நினைவுகள் அழியாதப்பா!
ஆண்டு இரண்டில் உங்களை நினைத்து
நித்தம் நித்தம் வாடுகின்றோம்!
உங்கள் ஆத்மா இறைவன் அடி சேர
என்றென்றும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!
— அம்மா, அப்பா, உறவுகள், நண்பர்கள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

