31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Murugesu Chandrasegaram
Age 80September 27, 1935 – December 20, 2015
- Born in
- Kokkuvil East
- Lived in
- Kokkuvil East
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு சந்திரசேகரம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்பின் உருவமாய்
பாசத்தின் தெய்வமாய்
குடும்பத்தின் குலவிளக்காய்
வாழ்க்கையின் வழிகாட்டியாய் இருந்து
இன்று எங்களை எல்லாம்
ஆறாத்துயரில் விட்டுச் சென்று
எம் நினைவுகளோடு நீங்காமல்
வாழ்ந்து கொண்டிருக்கும்
எங்கள் தெய்வமான அப்பாவே!
உங்கள் பிரிவால் துயருறும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
அன்னாரின் இறுதிக்கிரியையின் போதும், தகனக்கிரியையின் போது நேரில் ஓடிவந்து உதவிகள் புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் தொலைபேசி மூலமாகவும் முகநூல் ஊடாகவும் உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் இருந்தும் மலர் வளையங்கள் வைத்து ஆறுதல் கூறியவர்களுக்கும், பல்வேறு வழிகளிலும் உதவிகள் புரிந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அவரது ஆத்மசாந்திப் பிரார்த்தனை 19-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
உடையார் ஒழுங்கை,
கொக்குவில் கிழக்கு,
கொக்குவில்,
யாழ்ப்பாணம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

