மரண அறிவித்தல்

In loving memory of
Nadarajah Sritharan
Age 62May 26, 1953 – March 21, 2016
- Born in
- Pungudutivu 4th Ward
- Lived in
- Rasavin Thoddam, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர், இராசாவின் தோட்டம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Louviers ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நடராஜா ஸ்ரீதரன் அவர்கள் 21-03-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, சிவக்கொழுந்து(அம்மாச்சி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சதாசிவம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ராதை, சுகிர்தா, கார்த்திகாயினி, சிவலக்ஷ்ன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஸ்ரீராகவன்(பிரான்ஸ்), ஸ்ரீஸ்கந்தராஜா(கனடா), ஸ்ரீபதி(பிரான்ஸ்), ஸ்ரீகாந்தன்(பிரான்ஸ்), ஸ்ரீபாஸ்கரன்(பிரான்ஸ்), ஸ்ரீகௌரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஸ்ரீதயானந்தன், ஸ்ரீரஜனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவநேசன்(நேசன்- பிரான்ஸ்), யோகேஸ்வரன்(யோகன்- பிரான்ஸ்), பார்த்தீபன்(பார்த்தி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இந்திரா, ஜெயகௌரி, சறோஜினி, ஜெயநிர்மலா, சாந்தி, விஜயகுமார், தேவராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுதாஜினி, சுதாகர், சுகந்தினி, சுதர்சினி, சுதர்சன், சுபாஜினி, சுஜியிர்த்தனா, சந்தியா, சாரங்கன், ஜனார்த்தனன், ஜனனி, யோன், ஜனிக்கியா, ஜொனாத்தன், வனஜா, வலேறி, றிஜீவன், தெபோறா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
லாவண்யா, சிந்துஜா, லக்ஷன், போல்பிரவின், மதுரா, மதுஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பார்கவி, ரோஜன், கீர்த்திகா, கஜிதரன், கிரிஜன், கோகிசன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
முக்கிய குறிப்பு:-
தவிர்க்க முடியாத காரணத்தினால் 29-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற உள்ள தகனம் செய்யும் இடத்தில் அன்னாரின் முகம் பார்த்து அஞ்சலி செலுத்த முடியாது என்பதை அனைவருக்கும் மிக தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
19 Rue De La Maison Rouge,
27400 Louviers,
France.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

