5ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Nadarajah Thillaiyampalam
Age 78February 15, 1936 – December 26, 2014
- Born in
- Pungudutivu 10th Ward
- Lived in
- Jaffna, Colombo, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா தில்லையம்பலம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் சிகரமே பண்பின் இலக்கணமே
பாசத்தின் ஊற்றே பார்போற்றும் உத்தமரே
மார் மேலும் தோள் மேலும் சுமந்து மகிழ்ந்தவரே
எம் நெஞ்சத்தில் நிறைந்த நியமான தெய்வமே..
உம் பிரிவுத் துயர் எமைத் தினமும் வாட்டுதப்பா
உமையிழந்த செய்தியால் மனம் தடுமாறுதப்பா
மறைந்து போனாலும் என்றும் மறைந்து போகாத
அன்பைக் காட்டிச் சென்றவரே
உம் கம்பீரத் தோற்றமும் உம் கம்பீரத் தொனியும்
அரவணைக்கும் பண்பும் என்றும்
எம்மனதை விட்டகலாதப்பா
அப்பா உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து
எம் நன்றிகளை தங்கள் பாதக்கமலங்களில்
காணிக்கையாக்கி ஆன்மா சாந்திபெற
ஆண்டவனை வேண்டுகின்றோம்...
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

