Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Nagaeswari Sithambaranathan

In loving memory of

Nagaeswari Sithambaranathan

Age 73November 22, 1943 – March 27, 2017

Born in
Eluthuvadduval
Lived in
Eluthuvadduval, Colombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகேஷ்வரி சிதம்பரநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எப்பொழுதும் மழைத்தூறலாய்
உங்கள் நினைவு....!
எங்கள் இதயங்கள்
நனைந்த காடாய் கிடக்கின்றன!

நித்தமும் உங்களையே தேடும்
உற்றமும் சுற்றமுமாய்
விழிநீர் வடிய
விடிகிறது பொழுதுகள்!

எங்கையம்மா போய்விட்டீர்கள்?
என நித்தமும்
நெஞ்சிடை உடைப்பெடுத்து
அழும் பிள்ளைகளின்
ஆற்றாமையின் அழுகுரல் கேட்கின்றதா?

ஓராண்டுகள் என்ன
ஓராயிரம் ஆண்டுகள்
கடந்தாலும் உங்கள் நினைவுகளே
பிள்ளைகளின் ஆழ ஊற்றுப்போல்
ஆர்ப்பரிப்பதை உணர்கின்றீர்களா தாயே!

கனவுகளிலும் மனம் பேசும்
கதைகளிலும் உங்கள்
நினைவுகளாய் உருகும்
மருமகன், மருமக்கள்
வதனத்தை பாருங்களேன் தாயே!

உங்கள் மனம் நிறைந்த
பேரப்பிள்ளைகள் தங்கள் மனமெங்கும்
உங்களையே பதியம்போட்டு
வளர்க்கும் அழகுப் பூச்செடியின்
மலர்க்கொத்தினை பாருங்கள் தாயே!

ஒற்றைப் பூட்டியாக ஒரு வண்ணநிலவு
உங்கள் நினைவில் ஒளிந்திருப்பாளே!
அவளின் பின்னே உங்கள் வம்சங்கள்
மலர்ந்து கொண்டிருப்பதை அறிந்து
பூரிக்கும் உங்கள் முகம் பார்க்கவேண்டும் தாயே!

எங்கள் நாகேஸ் இல்லை
என ஏங்கும் அண்ணாக்களும்
அண்ணிகளுமாய் உறவுகளின்
உள்ளங்கள் வாடுவதை பாருங்கள் தாயே!

அம்மா, மாமி, அம்மம்மா, அப்பம்மா, பூட்டம்மா,
சகோதரி, மச்சாள், என நீங்கள் அலங்கரிக்கும்
அத்தனை உறவுகளும் உங்கள்
நினைவுகளுடனே என்றும் பயணிப்போம்!

உங்கள் வழிகாட்டுதல்கள்
என்றும் வாழ்வாகி வாழ்வோம் தாயே!
ஓம்சாந்தி! ஒம்சாந்தி! ஓம்சாந்தி!

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · March 28, 2017மரண அறிவித்தல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.