நன்றி நவிலல்

In loving memory of
Nagalingam Sellathurai
Age 90August 1, 1930 – December 8, 2020
- Born in
- Kuppilan
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் செல்லத்துரை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
திதி வெண்பா
மன்னு சர்வாரி கார்த்திகை இருபத்துமூன்று
மின்னு தேய்பிறை அட்டமியே - பொன்னின்
பொலிவுற்ற செல்லத்துரை பொன்னுலகில் - விநாயகரடி
பாரொரீஇச் சென்றார் பரிந்து!
நேரிசை வெண்பா
சிந்தை சிறந்து அமுதவிழாவொடு பத்துசேராண்டு
வந்தவழியாற்றிய மாண்புறு சேவையாளன்
செய்ந்நன்றியான் மார்க்கண்டுமறுநாம செல்லத்துரைசெம்மலிறை
யெய்தினார் விநாயகர் பாதமிசைந்து!
எங்கள் அன்புத் தந்தையின் மறைவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்றிருந்த வேளை நேரடியாகவும் தொலைபேசி, குறுந்தகவல்கள் ஊடாகவும் ஏனைய சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் எமக்கு ஆறுதல் கூறி அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டவர்களுக்கும் இன்றுவரை எமக்குப் பல வழிகளிலும் உதவிகள் புரிந்தவர்களுக்கும் அன்னாரின் ஆத்மசாந்திக்காய் பிரார்த்தனை செய்தவர்களுக்கும் எமது குடும்பத்தினர் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

