31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Nagaposaliyammah Magalingam
Age 78January 1, 1932 – October 15, 2010
- Born in
- Achchuveli
- Lived in
- Achchuveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஅச்சுவேலி பத்தமேனி பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த நாகபூசனியம்மா மகாலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
பாசத்துடன் எமை வளர்த்து
பார் புகழ வைத்த அம்மம்மாவே!!!
நாடு விட்டு நாடு
நான் திரிந்த காரணத்தால்
கூடிப்பழகக் கொடுத்து
வைக்கவில்லை அம்மம்மாவே!!!
நான் பிரான்ஸ் வந்து
ஆண்டுபல ஆனாலும்
கண்டு கதைக்க கன
நாட்கள் கிட்டவில்லை
போவோம் கதைப்போம்
எனப் பொழுதைக் கழித்துவிட்டேன்..
வீண் பொழுதை நான் கழிக்க
வென்றுவிட்டான் காலனவன்
இன்னும் பல ஆண்டுகள் எம்முடன்
இன்பமாய் வாழ்ந்திடுவார்
என் அம்மம்மாவென்றே
மனமார நான் நினைத்தேன்
தாய்த் திருநாடு வந்தே
பார்த்திடுவோம் எனவே
காத்திருந்த வேளையிலே
கடைசி நேரம் முடியாதென்றே
என் பயணத்தை நிறுத்திவிட்டேனேயம்மம்மா....
உங்கள் பேரப்பிள்ளைகள் தனிமையாக
தவித்திருக்க கண்ணிமைக்கும் நேரத்திலே
காலனவன் உன்னுயிரைக்
கவர்ந்து சென்ற சேதி
காதினிலே விழுந்ததுவே
கலங்கித்தான் போனோமே
உங்கள் ஆசைமுகம் பார்க்காமல்,
இனிய குரல் கேளாமல்
வெந்துயரில் வீழ்ந்து
அழுது புலம்புகின்றோம்.
உங்கள் ஆன்ம சாந்திக்காய்
இறைவனை வேண்டுகின்றோம்.
— உம் துயரில் வாடி நிற்கும் உங்கள் பாசத்திற்குரிய பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

