2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Nalini Raveendrakumar
Age 58May 21, 1957 – February 21, 2016
- Born in
- Uduvil
- Lived in
- Herning
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Herning ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நளினி ரவீந்திரகுமார்(பவா) அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
யாழிலும் டென்மார்க்கிலும் வசித்து
இரண்டாயிரத்து பதினாறில் அமரத்துவம்
எய்திய எங்கள் குலவிளக்கே..!
அன்பிற்கினியவளே - என்
ஆருயிர் பவாவே
இல்லறத்தில் நாமிணைந்து
ஈடில்லா மகிழ்ச்சியுற்றோம்
உன்னைக் கரம் பிடித்து
ஊர்விட்டு ஊர்வந்து
எல்லையில்லா ஆனந்தமாய்
ஏற்றமுடன் வாழ்ந்திருந்தோம்!
ஐயோ என் அலறல்
ஒலித்து இன்னும் ஓயவில்லை
ஓவியமாய் இருந்த நீயும் ஓடி மறைந்ததெங்கே?
ஆண்டு இரண்டு போனதுமே அதற்கிடையில்
மாண்டு போய் நீயும் என் அருமைத் தாயாரே
வேண்டுமென்றோ காலன் உனை வேரறுத்துப் போனான்!
கூண்டுக் கிளி பறந்ததுவே கூடி அழ யாருமில்லை
வெளிநாடு வந்து வாழ்ந்து
களி கொண்டோம் இம்மேதினியில்
பழி ஒன்றும் நாம் செய்யவில்லை
விழி இல்லாக் காலன் - இங்கே
வழி மாறி வந்ததேனோ?
அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும்
கணவன், மகள், மருமகன், பேரப்பிள்ளைகள், உறவினர்.
— கண்ணன்(கணவர்)
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

