1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Nallathampy Parameswaran
Age 49March 4, 1964 – November 29, 2013
- Born in
- Pungudutivu 9th Ward
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபுங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா scarborough ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நல்லதம்பி பரமேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எல்லாமாய் நீயிருந்தாய் அப்பா- நாம்
எல்லோரும் மகிழ்ந்திருந்தோம்
சொல்லாமல் உன் பார்வை அது
செல்லும் வழி நாம் நடந்தோம்
தோள்மீது எமைச் சுமந்தாய்
சோறூட்டி தினம் சிரிக்க வைப்பாய்
காலத்தில் உன் மடியில் நாம் வளர
ஊர் கூட்டிச் சிறப்புடனே தேரிழுத்தாய்
முள்ளான பாதையெல்லாம்- எமை
ஆளாக்க நடந்தாயப்பா
உன் கனவை நாம் நிறைக்க
முளைத்தெழுந்து வருமுன்னே
எல்லாம் பொய்யாக்கி இல்லாத தொன்றாக்கி
சொல்லியழ எம்மைவிட்டு நல்லுலகம் சென்றுவிட்டாய்
நிலவுகின்ற வானும் நிறைந்து நிற்கும் காற்றும்
பொய்யாத மறையும் பெய்கின்ற மழையும்
நில்லாமற் சுற்றுகின்ற நிறையுலகு உள்ள வரை
அப்பா நீ நிறைந்திருப்பாய் எம் இதயமது துடிக்கும் வரை
உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும்
உங்கள் தாய், மனைவி, பிள்ளைகள், சகோதர்கள் மற்றும் உறவினர்கள்
— மனைவி, பிள்ளைகள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

