மரண அறிவித்தல்

In loving memory of
Nalliah Kamaloshani
Age 85June 6, 1932 – December 29, 2017
- Born in
- Ponnalai
- Lived in
- Chulipuram
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், சுழிபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட நல்லையா கமலலோசனி அவர்கள் 29-12-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை(வரகவி) முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கேசவதாஸ்(சிங்கப்பூர்) மற்றும் சகலகலாவல்லிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அம்பலவாணர்(மலேசியா), மகேஸ்வரி(சிங்கப்பூர்), சந்திரராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தேவகல்யாணி, தேவரேணுகா, தேவசுதன், தேவதாஸ்(பாபு), தேவரமணன், தேவகாந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சிவகுமாரன் மற்றும் சுந்தரலிங்கம், கோமளா, ஆதிரை, ரதிவதனி, கிருஷ்ணவேணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவசண், அபிஷாதனா, சம்பிகா, விபீசன், காயத்திரி, துவாரகன், அட்சரண், அர்த்தனா, தனுஷா, கோசலா, துஷாகரன், யுவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

