1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Natkunanathan Pushpadevi
Age 52August 15, 1961 – June 4, 2014
- Born in
- Chunnakam
- Lived in
- Atchuvely, Burgdorf
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுன்னாகம் பருத்திக்கலட்டியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, சுவிஸ் Burgdorf ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புஸ்பதேவி நற்குணநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உன் ஆருயிர் அடங்கி
எம் புலம்பல் தொடராகி
எம் புலம்பல் அடங்கி
மௌனம் தொடராகி
மௌனம் வளர்ந்து
என் நினைவுகள் மலையாகி
நினைவுகள் அடங்காது
நாள் என்றும் தொடராக
அகவை ஒன்று மலர்கிறதே
அவனி விட்டு நீ சென்று
உனையிழந்த உன்னுறவு
துணையிழந்த இணைபோலும்
உனையிழந்த உன் சுற்றம்
கணையில்லா அம்புபோலும்
கானம் பாடும் குருவி கூட
உனக்காய் இன்று இரங்கல் பாட
உனையிழந்து பரிதவிக்கும்
உமதினிய சொந்தம் நாம்
உம் உதிர்வின் அகவை ஒன்றாம்
இந்நாளில் உன் ஆன்மா சாந்திபெற
விழிநீரால் பூஜிக்கின்றோம்.
உன் நினைவுடன் வாழும்
கணவன், பிள்ளைகள், மருமகள்,
உற்றார், உறவினர்கள், நண்பர்கள்.
அன்னாரின் பிதிர் வழிபாடு 24-05-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 9:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து Uferweg 1-15, 3400 Burgdorf, Switzerland எனும் முகவரியில் பி.ப 12:00 மணியளவில் இடம்பெறும் மதிய போசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

