1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Navanathan Jasothan
Age 25July 9, 1990 – September 12, 2015
- Born in
- Batticaloa
- Lived in
- Batticaloa
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த நவநாதன் யசோதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
தாமரை மலர்போல் தங்கமயமான
அங்கமுடைய எங்கள் பங்கஜா!
சாமரை வீசி யாவரையும் சங்கமமாய்
சாந்தமுடன் வாழ வைத்தாய்
வீமரை உடைய அண்ணர்கள் போல்
வீராப்புடன் வாழ்ந்து வந்தோம்
தேமதுர சீமையை விட்டு
சிறிலங்கா சென்று உயிர் நீத்தனையோ?
மீன்பாடும் தேன்நாடம் மட்டக்களப்பு
புளியந்தீவு புண்ணிய பதியில்
வான்பாடும் வானம்பாடியாய் வனப்புமிகு
சுந்தரவதனமாய் அவதரித்தீர்!
நான்பாடும் கண்கண்ட தெய்வம்
நவநாதன் சதாலெட்சுமி புத்திரனாய்
அன்போடு நவநீதன், ரமணராஜ்
மயூரகி உடன் பிறப்புக்களாகினாய்
ஆனைப்பந்தி பிள்ளையாரை
அனுதினமும் வேண்டி நிற்கின்றோம்!
மானைப் போன்று இளம் கன்றாய்
துள்ளித் திரிந்த உன் அழகை
தேனைப் போன்று சொல் அமுதம்
நித்தம் தித்திக்கும் வாயில் உன்
ஊனை, உயிரை மறுபிறப்பிலும்
எம் உடன் பிறப்பாய் யாம்பெற்றிடவே
வர்த்தக தொழில் ரீதியான
உயர் கல்வியை லண்டனில் தொடர்ந்தீர்
வித்தகனாக வேண்டுமென்று
ஊறுபாடில்லாக் கல்வியில் விளங்கி
உத்தமச் செல்வனான
உயர் நற்குணமுடைய சற்குரு யசோதன்
சொர்கம் சேர்ந்தனையோ?
சுற்றம் சோகமுற சோர்வில் எமை ஆழ்த்தி!
ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

