Aruthal

31ம் நாள் நினைவஞ்சலி

Photo of Nicholas Rameshkumar Roziro

In loving memory of

Nicholas Rameshkumar Roziro

Age 54October 22, 1962 – December 18, 2016

Born in
Koiyathoddam
Lived in
Toronto

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரமேஸ்குமார் றொசாய்ரோ அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

என் ஆசை மகனே ரமா...

உன்னை இழந்த சோகத்தில் உன்னைப் பெற்ற வயிறு
ஊழித்தீயாய் கொழுந்து விட்டு பற்றி எரியுதடா...
பற்றி எரியும் என் வயிற்றை பகிர்ந்து
கொண்ட உன் உடன் பிறப்புக்கள் எல்லாம்
பாசத்தில் நெஞ்சம் கருகி மூர்ச்சையிழந்து
வேகாமல் வெந்து வேகுறார்களடா...

சிற்றன்னையரும், தந்தையரும், மாமன், மாமியரும்
செயலிழந்து நினைவிழந்து ஆற்றுவார் யாருமின்றி
அனலில் விழுந்த புழுவாய் துடிதுடிக்கிறார்களடா...

உடன்பிறவாச் சகோதர சகோதரிகளும்,
மைத்துன, மைத்துனிகளும்,
பெறாமக்களும், மருமக்களும் இடியேறு
கேட்ட நாகம் போல் பதைபதைத்து நிலைகுலைந்து
தவியாய் தவிக்கிறார்களடா...

உன் அன்பின் அரவணைப்பில்
ஆண்டவனை உணர்ந்த
உன் கண்மணியும் உன் நிழலை
தொலைத்துவிட்டு நிர்க்கதியாய் திக்குத்திசை புரியாது
ஜடம் போல் விறைத்து விக்கித்து நிற்கிறாளடா...

உன் மேன்மை குணம் அறிந்த
ஒவ்வொரு உறவினரும்
உற்ற நண்பர்களும் இதயத்தின்
ஒரு பாதியை இழந்த வேதனையில்
மனம் கசிந்து மெளனக் கண்ணீர் பொழிகிறார்களடா...

எங்கள் தங்க மகனே விலைமதிப்பற்ற மாணிக்கமே
எத்தனை பாசம், எத்தனை நேசம், எத்தனை அன்பு
அன்பின் ஆலயமே அத்தனை உணர்வுகளையும் எம்மேல்
பொழிந்து விட்டு சடுதியாய் எங்கள் இதயங்களை கிழித்து
துண்டாட எப்படி உனக்கு மனம் வந்ததையா?..

உன் அன்பு முகத்தை இனி எங்கு காண்போம்?..
செல்லமே செல்லமே என்று உன் பெறாமக்களை
செல்லமாகக் கூப்பிட்ட உன் பாசக்குரலை இனி
எங்கு கேட்போம்? உன் அழகிய திரு
உருவத்தை அணைத்து ஆரத்தழுவ இனி ஏது வழி?..

ஐயோ சித்தம் கலங்கி, சிதறுண்டு நிற்கிறோமைய்யா
கொடிது கொடிது மகனே எங்களை நீ பரிதவிக்க
விட்டுவிட்டு காலனுடன் கைகோர்த்து சென்றது
கொடுமையிலும் கொடுமையைய்யா...

ஆறாது ஆறாது எங்கள்
ஆண்டவனே நேரில்வந்து ஆற்றினாலும்
உன்னை இழந்த சோகம் எமக்கு இனி ஆறாது ஆறாது...

ஆ... எங்கள் வயிறுகளும், நெஞ்சங்களும் நீ
பற்றவைத்த பிரிவுத் தீயில் எரிந்து சாம்பலாகிறதே...
ஏன் இந்தத் தீயை மூட்டினாய்?..
எப்படி மனம் வந்து செய்தாய்?..
என்று நீ கல்நெஞ்சனாகினாய்?..

எங்களை விட்டு நீ சென்று 31 திங்கள்கள்
கழிந்து விட்டனவே ஐயோ நேற்றுபோல்
எம் உள்ளங்கள் ரணமாய் கொதிக்கிறதே...

ஐயகோ! நீ மாண்டு விட்டாய் என்று சொல்லும்போது
எம் வாய்கள் நஞ்சையுண்ட வேதனையில் துடியாய்
துடிக்கிறதே கண்ணை விட்டு நீ மறைந்து விட்டாய்...
ஐயோ எங்கள் மனக்கண்களில்
சிரஞ்சீவியாய் நிறைந்து நிற்கிறாயே
எங்கள் அன்பு மகனே தம்பி ரமா...

எப்படிப் பொறுப்போம் உன் இழப்பை எப்படி மறப்போம்
உன் நினைவை?.. எப்படி இனி எம் எஞ்சிய
வாழ்நாட்களை கழிப்போம்?..
நினைக்க நினைக்க நெஞ்சம் வெடிக்குதே
வயிறு பற்றி எரியுதே உயிர் கருகுதே

உன்னைத் தொடர்ந்து உனக்கு
வழித்துணையாக வர முடியவில்லை நீயில்லாத
உலகில் வாழவும் வழி தெரியவில்லை
உன்னைப் பிரிந்த சோகம்
எங்களை அணு அணுவாய் கொல்லுதே

உன் மரணத்தில் நீ ஆன்ம சாந்தி அடைந்து விட்டாய்
மகனே ஆனால் எம் உயிர் உள்ளவரையும்
இந்த மரண வேதனையின் கொடுமை குறையாதே
புத்திர சகோதர சோகம் மறையாதே...

நீயில்லாத இந்த உலகு எங்களுக்கு
இனி வெறும் பாழடைந்த மண்டபம்தான்
இருள் சூழ்ந்த பாழ்க்கிணறுதான்
உன்னை இழந்து உயிர்வாழும்
நாங்களும் இனி உணர்வற்ற
வெறும் நடைபிணங்கள் தான்...

இருப்பினும் நீ ஆண்டவன்
சன்னிதானத்தில் ஆத்மசாந்தியுடன்
இருக்க தினம் தினம் கடவுளை
வேண்டும் உன்னை அறிந்த
உன் அன்பை பகிர்ந்த
உன் நேச உள்ளங்கள்...

Rama we will miss you for the
rest of our lives because you are
so dear and very precious to us.
You are one of a kind
We will love you forever.

உன் பிரிவால் துடிதுடித்து துவளும்

உன் அன்புத் தாய் தவமணி றொசாய்ரோ

உன் சகோதரர்கள் கலா, ராஜன், பேமி(F), உஷா

உன் மனைவி ரூபினி

அம்மம்மா காலஞ்சென்ற பொலின் கந்தையா

சிற்றன்னையர், தந்தையர் காலஞ்சென்ற கிறேஸ் போல்(ஆசையம்மா) , புஸ்பம் பாலேந்திரா(பூவம்மா), ஆன் திருக்குமார்(சித்தி), குரூஸ், பாலேந்திரா, காலஞ்சென்ற திருக்குமார்

மாமன் மாமியர் காலஞ்சென்ற பிறின்ஸ் கந்தையா, ஜோர்ஜ் கந்தையா, காலஞ்சென்ற கிங்ஸ்லி கந்தையா, ராணி, ரஞ்சி

மைத்துன மைத்துனிகள் தியாகன், இந்திரா, பிறின்ஸ், சுபேந்திரன், ராஜன், சிறீ, எமி, நிக்கோ, நிர்மலா, நொயலா, கஸ்ரன், டெனி, தேவாஜினி

உடன்பிறாவாச் சகோதர சகோதரிகள் விஜயபிரியா, கிறிசாந்தி, கிறிஸ்ரோப்பர், பாபு, தம்பா, பானு, பிரபி, தங்கா, நிலா, சாந்தன், தர்ஷினி, ஜெமி, அருள்

பெறாமக்கள் தானியா, பிரவீனா, நிறைஞ்சலா, கவிதா, ஷோன், டெறிக், பிறிங்கிள், ஸ்ரெபனி, ஜனனி, சகானா, விபுஷா, ஜோசுவா, பற்றிக், ஜெரோமி, ஆகாஷ், பேபியன்(f), டினேஷ், டரன், திவ்வியா, ஹரி, தபீத்தா, பிரபூஷன், அஸ்வினி, ஈசானி.

— தாய்

Other notices

  1. Anniversary · December 12, 20171ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.