Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Nicholas Rameshkumar Roziro

In loving memory of

Nicholas Rameshkumar Roziro

Age 54October 22, 1962 – December 18, 2016

Born in
Koiyathoddam
Lived in
Toronto

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரமேஸ்குமார் றொசாய்ரோ அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

என் அருமை மகனே ரமா!
பன்னிரண்டு திங்கள் பறந்தோடி விட்டனவே
நீ எங்களை பரிதவிக்க வைத்து விட்டு....!
காலனுடன் கண்ணுக்கெட்டா காத தூரம்சென்று!
ஆனால் உன்னை பத்து திங்கள் சுமந்து பெற்ற
உன் அன்னையின் பாழும் வயிற்றில் காலன்
மூட்டிய தீயின் கோரம் சற்றும்
தணியவில்லையே மகனே!

தணிக்கும் விதமும் தெரியவில்லையே!
உன்னைப் பெற்றவயிறு பற்றி எரியுதையா
பாவியுயிர் கரைந்து உருகுதையா
கண்ணுக்குள் நிற்கிறாய்!
கண் இமைக்க முடியாமல் தடுக்கிறாய்!
கண் எதிரில் வர மறுக்கிறாய்
கண்களை குளமாய் வடியப் பண்ணுகிறாய்!
கனவா நினைவா, நாங்கள் உன்னை இழந்தது?

கண்ணுறங்க முடியவில்லையே!
நீ இறந்தது கற்பனையா இல்லை
கட்டுக்கதையா புரியவில்லையே?
கருத்தை விட்டகலா நினைவாய், நிஜம்
எங்களை அணு அணுவாய் கொல்லுகிறதே
சித்தம் கலங்கி பித்து பிடித்த ஜடமாய்
குற்றுயிரும், குலையுயிருமாய்
ஊனுருகி நெஞ்சு வெடித்து துடியாய் துடிக்கும்
உன் தாயின் சோகம் என்று தணியும் மகனே!

எங்கனம் மறையும் ஐயா!
தணியாத தாகமாய் ஆறாத பெரு
நெருப்பாய் அலைபாயும் உன்
சகோதரங்களின் நெஞ்சங்களுக்கு
ஆறுதல் இனி எப்போ கிடைக்கும் மகனே!
மனம் கரைந்து கதறுகிறோம்!
உணர்வுகளின் வெப்ப அகோரத்தில்
நெஞ்சங்கள் எரிமலையாய்
வெடித்து சிதறுகிறோம்!

ஏக்கப்பெரு மூச்சில் மூர்ச்சையாகி
சொல்லொணா துயரில் பேச்சிழந்து
ஸ்தம்பித்து நிற்கிறோம்!
ஐயோ ஆறும் வழி தெரியவில்லையே!
ஆற்றும் சக்தியும் யாரிடமும் இல்லையே!
மறக்க முடியாத, பாசம் நிறைந்த,
ஓர் உன்னத உயிரை அன்பின்,
பொக்கிஷத்தை எமக்கு பரிசாய் தந்து
விட்டு பாதியில் பறித்தெடுத்ததன்
நியாயம் என்ன கடவுளே!

பரிதவிக்கும் எங்கள் உள்ளங்களுக்கு
விளங்கவில்லையே?
என்ன தவம் செய்தேன் உன்னை
மகனாய் பெற்றெடுக்க என்று புளகாங்கிதம்
அடைந்த உன் தாயின் உள்ளம் இன்று
என்ன பாவம் செய்தேன் உன்னை இழக்க
என்று எண்ணி எண்ணி துடியாய்
துடிக்கிறதே ஐயா!
இறைவனே ஏன் எங்களுக்கு இந்த
ஆறாத்துயரை தந்தாய்?

நாங்கள் செய்த பாவம் என்ன ஐயா
என் செல்ல மகனே! தங்க மகனே!
என் கடைசி மகனே! காலங்கள் மாறும்
காட்சிகள் மாறும்! ஏன் எங்கள்
உள்ளக்கனவுகள் கூட கைகூடும் ஆனால்
உன்னுடன் நாங்கள் பகிர்ந்து கொண்ட
இந்த உறவின் உயிர்த்துடிப்பும்
அன்பின் பிணைப்பும் கால ஓட்டத்தால்
மாறுமோ மகனே?

என்றுமே மாறாது மறையாது!
என் செல்ல மகனே தம்பி ரமா
உன்னால் வந்த இந்த சொந்த பந்தம்
இந்த ஒரு பிறவியுடன் முடிந்து போகும்
உறவல்லவே! ஏழேழு ஜென்மத்திற்கும் இந்த
பாசமும் நேசமும் உன்னைத் தொடர்ந்து
வரும், தொடர்ந்து வரவேண்டும் மகனே!
உன்னைப் போன்ற ஓர் இனிய உறவை
மறப்பது தான் எப்படி?

என்றென்றும் நீ எங்கள் உள்ளங்களிலும்
இல்லங்களிலும் எங்கள் உயிர் உள்ள
வரையிலும் சிரஞ்சீவியாக இருப்பாய்
இது எங்கள் ஆத்மாவின் தெய்வ சத்தியம்!
மானிடர்களின் பிறப்பையும் இறப்பையும்
நிர்ணயிக்கும் பரம தேவனே!

விலைமதிக்க முடியாத செல்வத்தை இழந்து
துடியாய் துடிக்கும் எங்கள் உள்ளங்களுக்கு
ஆறுதல் தாரும் இறைவனே!
ஆற முடியாமல் தவிக்கிறோம்
இந்தப் பாவப்பட்ட ஜென்மங்களுடன்
கூடிப்பிறந்து, உறவாடி வாழ்ந்து பிரிந்து
சென்ற எங்கள் அன்பு மகன் ரமாவுக்கு,
எங்கள் செல்லத் தம்பிக்கு, என் மகனுக்கு
நித்திய இளைப்பாற்றியை தாரும் கடவுளே!
மறுப்பிறப்பிலும் நீ எனக்கு மகனாக வர
வேண்டும் என்று ஆண்டவனை வேண்டி
ஆவிசோரும் உன் அருமைத் தாய், மனம்
கசிந்து வெம்பி அழுகிறேன் ஐயனே!

நீ எங்களை விட்டுபிரிந்த போதும்
உன் ஆன்மா சாந்திக்காக தினம் தினம்
ஆண்டவனை வேண்டுகிறேன் ஐயா,
தேவனே உமது பாதத்தை எங்கள்
சோகக் கண்ணீரால் கழுவி கெஞ்சி
கேட்கின்றோம் தந்தையே! எங்கள்
ரமாவுக்கு நித்திய இளைப்பாற்றியை
கொடுத்தருளும் ஆண்டவரே!

உன் பிரிவால் துடி துடிக்கும் உன் தாய், மனைவி,
சகோதர சகோதரிகள் பெச்சி மாமா,
பூவம்மா, சித்தி, பாலா அங்கிள், பெறாமக்கள்
மைத்துனர் மைத்துனிகள் உற்றார், உறவினர் நண்பர்கள் !

— தவமணி றொசாய்ரோ(தாய்)

Other notices

  1. 31st day · January 16, 201731ம் நாள் நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.