Aruthal

10ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Panchadcharam Kirubakaran

In loving memory of

Panchadcharam Kirubakaran

Age 36January 11, 1970 – April 13, 2006

Born in
Chavakachcheri
Lived in
Chavakachcheri

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சாவகச்சேரி பெருங்குளம் பிள்ளையார் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பஞ்சாட்சரம் கிருபாகரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

புன்சிரிப்பை சிந்தி நின்ற பூப்போல் வதனம்
புகழளந்த கொடைத் தன்மை
கடவுள் பக்தி நன்னெறியில் நடந்த தடம்
நல்லோர் போற்ற நல்லனவே செய்தவுனை
நடுவில் பிரிந்து மன்னுதுயர் சூழ்ந்தோமே
மனையின் ஒளியே
மன்னவனாய் பவனிவந்த மாண்பே கிருபா!
என்னகுறை கண்டானோ? இரங்காக்காலன்
எடுத்தானோ உன் உயிரை ஏங்கினோமே!

எவருக்கும் கொடுத்து வந்தாய்
எதுகேட்டாலும் இல்லையெனச் சொல்லாது
அள்ளி ஈந்தாய் தவவடிவே தலங்கள்
பல பணிகள் செய்தாய்
தஞ்சமென ஏழையர்க்கு தனங்கள் பல செய்தாய்
உவந்து பல நிறுவனங்கள் உதவி கேட்க
உணர்வோடு சேவைக்காய் உழைப்பை ஈந்தாய்
எவருமே எதிர்பாரா நேரம் எம்மை
இடிந்தலற வைத்து விட்டு எங்கு சென்றாய்?

ஆண்டுகள் பத்து ஓடி மறைந்தாலும்
என்றும் உன் நினைவுகளுடன்!
அம்மா, அண்ணாமார், அக்கா, தங்கைமார், அண்ணிமார், அத்தான்,
மச்சான்மார், பெறாமக்கள், மருமக்கள்

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

— குடும்பத்தினர்

Other notices

  1. Remembrance · April 8, 2017நினைவஞ்சலிRead notice →
  2. Remembrance · March 29, 2018நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.