1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Perambalam Thangavadivel
Age 78January 1, 1941 – November 6, 2019
- Born in
- Siruppiddy
- Lived in
- Mallavi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், மல்லாவியை வதிவிடமாகவும் கொண்டிருந்த பேரம்பலம் தங்கவடிவேல் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அன்பு உறவே அப்பா!
எங்கு தேடுவோம் உமை அப்பா!
கண்ணைக் காக்கும் இமை போல
எம்மைக் காத்த எம் அப்பா!
வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உம்
நினைவால் வாடுகிறோம் அப்பா!
தினம் ஒரு சந்தோசம் தந்தீர்கள்
இன்று தினம் தினமாய் உங்களுக்காய்
அழுகின்றோம் அப்பா...
வருடங்கள் ஒன்றானாலும் ஆறாது
உங்கள் பிரிவின் துயரம்
தீராது எங்கள் சோகம்
உங்கள் இழப்பை எண்ணியெண்ணி
இன்றும் எங்கள் விழிகளில்
வழிகின்றதே கண்ணீர்த்துளிகள்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

