நினைவஞ்சலி

In loving memory of
Poovalingam Yogarani
Age 46April 7, 1965 – July 25, 2011
- Born in
- Manippay
- Lived in
- Manippay, Velanai East, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த பூவலிங்கம் யோகராணி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
வசந்த கால கோலங்கள்,
வானில் விழுந்த கோடுகள்,
கலைந்திருக்கும் கனவுகள்,
கண்ணீர் சிந்தும் நினைவுகள் !
அம்மா நீ நீண்ட துயில் கொள்ளும்
அழகைப்பார்க்க முடியாமல் துடிக்கின்றோம்,
தவிக்கின்றோம்,நினைத்து நினைத்து அழுகின்றோம் !
எங்கேயம்மா போய்விட்டாய்
என்று நினைத்து நினைத்து வருந்துகின்றோம்
ஆனால் நீ எங்கேயும் போகவில்லை
எங்களுடனும் அப்பாவோடும்
இதயத்தில்வாழ்ந்து கொண்டு தான்
இருக்கின்றாய் அம்மா !
உதிரம் நீ கொடுத்தாய் !
உயிரும் நீ கொடுத்தாய்,
உடலும் நீ கொடுத்தாய்
அப்படி இருக்கும் பொழுது
நீ எப்படி பிரிந்து போவாய் சொல்லம்மா ?
இல்லையம்மா நீ
எம்மோடுதான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றாய்
எத்தனை பிறப்பெடுத்தாலும் நீரே
எமது தாயாக வரவேண்டும் அம்மா
நீ என்றும் மறையவில்லை
எம்மோடுதான்வாழ்ந்து கொண்டு இருக்கின்றாய்
அம்மா ! அம்மா !! அம்மா !!!
உன் ஆத்மா சாந்தியடைய வணங்குகின்றோம்!
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

